அஸ்கா தயாரிப்பாளரிடம் சிக்காமல் தப்பிய டிஸ்கா

ஆமிர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் கற்றல் குறைபாடு உள்ள சிறுவனின் தாயாக நடித்து பிரபலம் ஆனாவர் டிஸ்கா சோப்ரா. இவர் தான் 1993ம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான ஐ லவ் இந்தியா படத்தில் ஹீரோயின்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்  தனது இளவயதில் சினிமா வாய்ப்பு தேடியலைந்த போது ஒரு தயாரிப்பாளர் தன்னை கரெக்ட் செய்ய முயன்றது பற்றிக் கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் டிஸ்கா.

அவர் தோழியுடன் வாய்ப்பு தேடியலைந்த போது ஒரு பெரிய தயாரிப்பாளர் அவரை அழைத்து வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார். சந்தோஷத்தில் மிதந்த அவரை தோழிகள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால் அந்த தயாரிப்பாளர் படத்தில் யார் ஹீரோயினாக நடித்தாலும் அவர்களை அவர் படுக்கைக்கு அழைத்து விடுவாராம்.

படம் ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்த டிஸ்கா தயாரிப்பாளரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நன்கு நெருங்கிப் பழகி நண்பர்களாக்கிக் கொண்டாராம். ஆனாலும் பிரச்சனை தீரவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங். அங்கே ஹோட்டலில் இருவருக்கும் ஒரே தளத்தில் அறை.

நள்ளிரவில் தயாரிப்பாளர் டிஸ்காவை டிஸ்கஷன் செய்ய அழைக்க வேறுவழியின்றி  அவர் அறைக்குச் சென்றார் டிஸ்கா. ஆனால் ஹோட்டல் ரிஸப்ஷன் மற்றும் கிச்சனிலிருந்து ஊழியர்களிடம் தொடர்ந்து தயாரிப்பாளர் அறைக்கு போன் கால் மேல் போன் கால்களாகப் போட்டு தொந்தரவு கொடுத்தபடியே இருக்க டிஸ்கா தப்பித்துவிட்டாராம்.