விஷாலுக்கு கல்யாணம். வரலட்சுமிக்கு இப்போ இல்லை.

நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நெருங்ங்கிய நண்பர்களாக இருந்து வருவது தெரிந்ததே. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று சினிமா இண்டஸ்ட்ரியே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஷால் வரலட்சுமியும் நானும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். எங்களது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும். இப்போதே புக் செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

அதே சமயம் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் வரலட்சுமியோ, ‘நான் எனது நடிப்புத் தொழிலை திருமணம் செய்துகொண்டேன். அதனால் இப்போதைக்கு திருமணம் இல்லை. எனவே தயவு செய்து என் திருமணம் பற்றி கிசகிசு எழுதாதீர்கள் ‘ என்றிருக்கிறார்.

அப்போ விஷால் கல்யாணம்னு சொன்னது தனித்தனியாகவா ? சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிங்கப்பா. இல்லாட்டி இப்படி சும்மா ஆளாளுக்கு இழுத்துக்கிட்டு வீராப்பு பேசுவாங்க.