ஆடை அவிழ்ப்பு படம் எடுக்கும் சல்மான்!

 ஒரு வழியாக எல்லா கேஸ்களிலிருந்தும் தப்பி ஹாயாக வந்துவிட்ட சல்மான்கான் அடுத்து சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டார். பல படங்களை எடுத்தும் விட்டார்.
எஸ்கேபிஎச்பி (SKBHP) என்ற பெயர் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்ததாக வரலாற்று திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படம், 60 களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று, சிப்பெண்டலெஸ் என்ற நிறுவனம் மூலம் பெண்களுக்கான ஆண்கள் ஆடை அவிழ்ப்பு நடனம் நடத்தி பிரபலமான சோமன் பானர்ஜி பற்றிய கதை.
பெங்காலியான சோமன் பானர்ஜி, சிப்பெண்டலெஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு நடன கலைஞரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின், 1994-ஆம் அவர் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். சோமன் பானர்ஜியின் நிஜவாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறதாம்.