ஆண்டவன் கட்டளை – விமர்சனம்.

காக்கா முட்டை, குற்றம் கடிதல் என பரீட்சார்த்த படங்கள் எடுத்த இயக்குனர் மணிகண்டனுக்கு முதல் கமர்ஷியல் படம். விஜய் சேதுபதி, ரித்திகா என இயல்பாக நடிக்க தெரிந்த ஹீரோ – ஹீரோயின் – வித்தியாச கதை களன் இவற்றின் பின்னணியில் நின்று ஆடியிருக்கிறார் மணிகண்டன்

வெளிநாடு செல்லும் ஆசை கொண்ட ஹீரோ – அதற்காக படும் சிரமங்களும் – அது நிறைவேறியதா என்பதும் தான் கதை.

இடையில் பாஸ்போர்ட் ஆபிஸ் துவங்கி, ப்ரோக்கர்கள் உள்ளிட்ட நமது சிஸ்டம் எப்படி இருக்கிறது என அங்கத்துடன் சொல்லி போகிறார்

விஜய் சேதுபதி – ஏமாற்றம், புன்னகை என அனைத்தையும் அளவோடு செய்துள்ளார் .ரித்திகாவிற்கு சென்று படத்திலிருந்து மிக வேறுபட்ட பாத்திரம்; வருகிற நேரம் குறைவு எனினும் – நடிக்க தெரிந்த நடிகை என நிரூபிக்கிறார்.

சின்ன பாத்திரங்களில் வரும் பலரும் இயல்பான நடிப்பை தருகின்றனர்

குறை என்று பார்த்தால் – பாடல்கள் சுமார்; மற்றும் படம் மெதுவாக (சில நேரம் இழுவை) யாக செல்கிறது

எல்லா பக்கமும் நல்ல ரிவியூ பெற்று கொண்டிருக்கும் இப்படம் கையை கடிக்காமல் ஓடி விடும்   !

-நன்றி. வீடுதிரும்பல் வலைப்பூ