தாரைதப்பட்டை பிஞ்சுக்கிட்டு போன பிறகு இயக்குனர் பாலா கொஞ்ச நாள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தார். யாரோ பெரும்புள்ளியிடம் அவர் பையனை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என்று அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டதாக நடுவில் செய்திகள் வந்தன.
தற்போது பாலா இயக்க, ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது என்கிற தகவல் கசிந்து மேலும் கதிகலங்க வைக்கிறது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
நடிப்பதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அடிவாங்கின டார்ச்சர் கதையெல்லாம் சூர்யாவுக்கு நல்லாவே தெரியும் மேடம். எதுக்கும் ஒரு தடவை சூர்யா கிட்ட கேட்டுக்கிட்டு அப்புறமா முடிவு பண்ணுங்க.

Related Images: