நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா’ சூரியின் தந்தை காலமானார்

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு 10.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்தார்.

அவரது மறைவை ஒட்டி இன்று மாலை பிரசாத் லேப்பில் நடைபெறுவதாக இருந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழில் இயக்கியிருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் முக்கிய வேடத்தில் சூரி நடித்திருக்கிறார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் ராஜாக்கூரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரி சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். சூரியின் தந்தை காலமான செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.