இதுவரை சினிமா மக்கள் தொடர்பாளராக அரும்பணி ஆற்றி பெரும் செல்வம் ஈட்டியுள்ள நிகில் முருகன் இனி அப்பணிக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு விரைவில் தயாரிப்பாளர் ஆகவிருப்பதாக, அவரது உதவியாளர் வட்டாரங்களில் படபடப்பாக பேசப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு தனது 42 வது பிறந்தநாளை ஈ.சி.ஆர் பங்களாவில் கொண்டாடிய நிகில் பார்ட்டியின் போது அந்த முடிவை அறிவித்தாராம்.

அப்படத்துக்கு இப்போதைக்கு நயன் தாரா ஹீரோயின் என்பது மட்டுமே முடிவாகியுள்ளது. நிகில் கால்ஷீட் கேட்டால் ரஜினி கமலில் துவங்கி யார் வேண்டுமானாலும் முன்வருவார்கள் என்பதால், அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை திரையுலகே திகைப்போடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

பி.கு: ஹல்லோதமிழ்சினிமா சில காலமாக சரிவர இயங்காத நிலையில், ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தீவிரமாக இயங்க, சில தினங்களுக்கு இது போன்ற வார்ம் அப் செய்திகள் வலம் வரும்.

Related Images: