’ஈட்டி’ அடி வாங்கியும் அசராத கூட்டணி

அரசியலில் சம்பாதித்து சினிமாவில் கோட்டைவிடும் மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ’ஈட்டி’. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தோல்வியை ஈட்டியது.
 குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற  படங்களை தயாரித்து வந்தாலும் ‘நாடோடிகள் தவிர்த்து அனைத்தும் மண்னைக்கவ்விய படங்களே இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ராயப்பன் தற்போது சிம்பு நடித்து வரும், மூன்று வகை ஆபத்துகளைக் கொண்ட ‘ AAA’ படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா – நிக்கி கல்ராணி நடிப்பில் ’கீ’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிறுவனம் ஈட்டி பட கதாநாயகனான அதர்வாவுடன் மீண்டும் இணைந்து தனது அடுத்த படத்தை துவக்கவுள்ளது.
பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா கதா நாயகனாக நடிக்கிறார். டார்லிங்’ ‘எனக்கு ‘ இன்னொரு பேரு இருக்கு’ போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். சாம் ஆண்டனின் காமெடி கலந்த திரைக்கதையும், அதர்வாவின் அர்ப்பணிப்பான நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். படத்தின் மற்ற நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர் மிக விரைவில் அறிவிக்கப்படும்.