பத்துப்பைசா பெறாத படம் ‘பாகுபலி’ அடூர் பொடேர்

பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று பிரபல மலையாளம் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 வசூலில் பல புதிய சாதனைகள் படைத்துள்ள படம் பாகுபலி 2.
கேரளாவில் விழா ஒன்றில் கலந்துகொண்ட அடூர், ‘இந்தப்படம் ஒரு கிரிமினல் வேஸ்ட். 1991 -ல் வெளிவந்த ‘பாதாள பைரவி’ எவ்வளவோ மேல். தேவையில்லாமல் ராஜமவுலியை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறார்கள்’ என்று பாகுபலி ரசிகர்களைச் சீண்டியுள்ளார்.