மந்திரம் தந்திரம் பில்லி சூன்யம் மிக்ஸிங் ‘பொட்டு’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இப்படத்துக்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான்.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வசனம்   –  செந்தில்

ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்

இசை   –  அம்ரீஷ்

பாடல்கள்   –  விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத்

ஸ்டண்ட்   –  சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங்   –  எலீசா

கலை  –  நித்யானந்த்

நடனம்    –  ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டமும், 3 பாடல் காட்சிகளும் திரையிட்டு காட்டப்பட்டன.

படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறுகையில், “இந்த படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள். மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா  நடிக்கிறார். இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில்  படுபயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார் வடிவுடையான்.

நடிகை இனியா கூறுகையில், “பொட்டு என்ற இப்படத்தின் தலைப்புக்கு உரிய கதாபாத்திரம் என்னுடையது. ஏற்கெனவே நான் சில ஹாரர் படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் மிகவும் வித்தியாசமானது. இது ஹாரரோடு ஆன்மீகமும் கலந்த படம்” என்றார்.

நடிகர் பரத் கூறுகையில், “மருத்துவக் கல்லூரி மாணவன், வயோதிகர், ஒரு பெண் என மூன்று கெட்டப்களில் இப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். பெண் வேடத்தில் சில காட்சிகளே நான் வருகிறேன். என்றாலும், பெண் வேடத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.