டெபாசிட் வாங்குவாரா விஷால்?

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெற்றிகளால் வெறிபிடித்து அலையும் விஷால் வதந்திகளின் தூண்டுதலால் ஒரு வழியாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குதிக்க முடிவெடுத்துவிட்டார்.

நடிகன் குசு போட்டாலும் தலைப்புச் செய்தியாக்கும் மீடியாவுக்கு சொல்லவும் வேண்டுமா? புயலில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் கதி ஆறாம் பக்கத்தில் இருக்க, இரு தினங்களாக தம்பி குஷால்தான் தலைப்புச் செய்திகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் போல் அரசியலையும் அவ்வளவு ஈஸியாக எடுத்துக்கொண்ட விஷாலுக்கு அரசியல் கிரிமினல்கள் சரியான பாடம் கற்றுக்கொடுப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க ‘தம்பி டெபாசிட் வாங்காட்டாலும் பரவாயில்லை. பிஜேபியை விட ஒரே ஒரு ஓட்டாவது ஜாஸ்தியா வாங்கிடுப்பா’ என்று உசுப்பேத்திக்கொண்டிருக்கிறார்கள் முகநூல், வாட்சப் வட்டார சோம்பேறிகள்.

வெலியிடப்பட்டிருக்கும் படத்தில் உள்நோக்கமோ டபுள் மீனிங்கோ இல்லை.