‘தானா சேர்ந்த கூட்டம்’ வீணாப்போன கதை

ரீமேக் பண்ணுகிறேன் பேர்வழி என்று நல்ல படங்களை கைமா பண்ணுவதில் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு ஈடு இணை இல்லை. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

2013ல் வெளிவந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்கான ‘தா.சே.கூ’ அப்படத்தின் நேர்த்தியில் பத்து சதவிகிதம் கூட இல்லாத நிலையில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. ரிலீஸான முதல்நாளே படம் குப்புறப்படுத்துவிட்ட நிலையில், திருச்சி பரதன் பிலிம்ஸ் பிள்ளையார் சுழி போட்டுவைக்க, ஒவ்வொரு விநியோகஸ்தராக நஷ்ட ஈடு கேட்டு நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நிலைமை இவ்வளவு பரிதாபமாக பல்லிளிக்க, படம் ரிலீஸான மூன்றாவது நாளே சக்சஸ் மீட் வைத்து வெட்கமில்லாமல் படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு என்று புளுகித்தள்ளியது சூர்யா அன் கோ.