திகில் முருகன் தயாரிக்கும் ‘லாங் ட்ரைவ்’

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புவரை படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்ருவதில் முன்னணி இடத்தில் இருந்த திகில்முருகனுக்கு சமீபகாலமாக வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு இறங்குமுகம். எண்பது தொண்னூறு படங்களுக்கு வேலை செய்தவருக்கு தற்போது ஏழெட்டுப்படங்கள் கூட இல்லாத நிலை.

அதுவும் நன்மைக்கு என்று நினைத்த அவர் இந்த புத்தாண்டின் முக்கிய சபதமாக படத்தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். முரளி மகன் அதர்வா அல்லது கார்த்திக் மகன் கவுதம் கார்த்தி ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிக்க ஜல்லிக்கட்டில் லூட்டி அடித்து, பிக் பாஸில் இடம் பிடித்த ஜூலி ஹீரோயினாக நடிக்கிறார்.

இயக்குநர் உட்பட ஏனைய தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு ஈ.சி.ஆர் ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக நடந்து வருகிறது.

படத்தின் டைட்டில் அநேகமாக ‘லாங் ட்ரைவ்’ என்பதாக இருக்கலாம்.