ரஜினி கட்சியில் ஆயிரம் கோடி பேர்…

காவிகளே( ஆர் எஸ் எஸ் & பி ஜே பி ) என்ன ஆள் பிடிச்சிருக்கீங்க. இந்த ரஜினி ‘தேறாத’ கேஸ்னு தெரிஞ்சே ஏன் இந்த விபரீத முயற்சி. பாருங்க அவரால் உருப்படியான ஒரு பிரஸ்மீட்  அல்லது ஸ்டேட் மெண்ட் விட முடியல.இல்லை ஒரு கூட்டம் சேர்த்து ஆட்டம் காட்ட முடியுதா? மூணு வருசம் ‘ அரசியல் ‘ பேச தடா வேறு.

இப்பப் பாருங்க , பத்திரிக்கைக்கான தகவல் கூட உங்க ஆளுங்களே இறங்கிச் செய்ற மாதிரி ஆகிவிட்டது. வேற வழியில்லாமல் உங்க டீம். மாலனும் , பத்ரி சேஷாத்திரியும் களமிறங்க வேண்டியதாகிவிட்டது பாருங்கள். மாலன் ரஜினி மீடியா டீம் ஹெட் ஆகி ‘ ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்ததாக’ ‘கதை’சொல்ல வேண்டியதாப் போச்சு. போகிற போக்கில் இருபது நாளில் 10 கோடி உறுப்பினர்கள்!!( நம்ம பேர் சேர்ந்திருக்கான்னு பாக்க வேண்டியிருக்குமோ). பத்ரி புதிதாக கேட்பது போல் தமிழ் தேசியர்கள் பேச்சுக்கு‘ விளக்கவுரை’ எழுதப் போக, அ. மார்க்ஸ் ‘ வைச்சுச் செய்ய ‘ அதையும் (in all fairness to prove his saintly being) ஷேர் செய்து தன் constituency யிடம் ‘ அனுதாபம்’ கேட்கிறார்.

என்னமோ போங்க ‘ கொண்டை தெரியுதுன்னு ‘ கேலிகூட பண்ண முடியவில்லை.அடிமை இரட்டையர் ஓபிஎஸ்/ இபிஎஸ் இடம் ‘ கறாரா வரவு ‘ டீல் போட்டது போல , ரஜினியிடம் ‘ செலவுக்கு பைஃனான்ஸ்’ மட்டுமென தெளிவா பேசியிருக்க வேண்டாமா? இப்ப சந்தேகமே இல்லாமல் பி ஜே பி ‘ பி ‘ டீம் ரஜினி என்பது உறுதியாகிப் போச்சு. தனியா விட்டிருந்தாலும் தோராயமா தொகுதிக்கு ஒரு மூவாயிரத்தில் இருந்து ஐயாயிரமாவது வாங்கியிருக்கலாம். இப்போது உங்கள் 1800 ஓட்டு வாக்கு வங்கி இரண்டாகப் பிரிந்தால் என்ன பயன்.

ஒன்று ரஜினியை பா ஜ க வில் சேர்த்துக்கங்க இல்ல இந்த மீடியா டீமை அவர்கிட்ட அனுப்பிருங்க . உங்களுக்கு தமிழிசையும், ஹெச். ராஜா வும் போதுமே.

முகநூலில் சுபகுணராஜன் Subaguna Rajan.