ராஜாவுக்கு பத்மவுபூஷன் விருது

மத்திய மோடி அரசின் பாவக்க்கணக்குக்கு பட்டியல் போட்டால் சொல்ல நடங்குதம்மா’ என்கிற நிலையில் தன் பாவக்கணக்கில் பரிகாரமாக, ஒரே ஒரு துளி, ராஜாவுக்கு பத்மவிபூஷன் அறிவித்திருக்கிறார்கள்.

நாளை ராஜாவின் ரசிகர்கள் எழுதும் முகநூல் குறிப்புகள் அனைத்தையும் உரிமையுடன் வெளியிடுவேன்.

நடிகர் பார்த்தீபன் எப்போதோ சொன்னது இது. இளையராஜா சார் சரக்கடிப்பதில்லை. ஆனால்.எட்டு மணிக்கு மேலே சரக்கடிப்பவர்களுக்குத் தன் பாடல்கள் வழியே கம்பெனி கொடுக்கிறார். துயர மனங்களின் துணை. பத்ம விபூசண் பண்ணைபுரத்தாருக்கு வாழ்த்துக்கள்!

-சரவணன் சந்திரன்

Saravanan Chandran

பத்மவிபூஷன் ராஜா சார்!

நன்றி, உங்கள் விருதுக்கும் அங்கீகரிப்புக்கும். ஆனால் அவருக்கான விருதுகள், எங்கள் தூக்கம் தொலைத்த பைத்திய இரவுகளில் தாலாட்டும் பாடல்களில், நாங்கள் கொண்டாடும், “த்தா..ராஜாடா” என்பதில் இருக்கிறது, என்பதை மத்திய அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்!

ராஜவேல் நாகராஜன்

Rajavel Nagarajan

நியாயமாய் இந்த பத்ம விபூஷண் விருதை இளையராஜா நிராகரிக்க வேண்டும். டாக்டரைப் பார்த்து கம்பவுண்டர் என்று சொன்னால் மகிழ முடியுமா? #BharatRatna4Ilaiyaraaja

-சரவணகார்த்திகேயன்Saravanakarthikeyan Chinnadurai