மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கும் நடனத்துக்கும் அவரது ரசிகர்கள் ஏன் கண்ணீர் விட்டார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் இன்று.
கலை என்னவெல்லாம் செய்யும்? தாளம் போட வைக்கும், ஆட வைக்கும், கண்ணீர் விட வைக்கும், நெகிழ வைக்கும், மகிழ்ச்சியூட்டும், கிளர்ச்சியூட்டும், கொண்டாட்ட உணர்வை அளிக்கும். இன்றைய மாலை நேரம் இவை அனைத்துமாக எனக்குக் கழிந்தது.

நான் நம்பும் அதே அரசியலை மேடையில் கலைஞர்கள் பாடுகையில் ஆடுகையில் எழும் அற்புத உணர்வுக்கு என்ன பெயர் வைக்க?
கானாவுக்கென இப்படியொரு concert இதற்குமுன் நிகழ்ந்ததில்லை. பெருமிதமும் பூரிப்பும், வியப்பும் மேலிட சொற்களற்றுப் போகிறேன். இதை சாத்தியமாக்கிய THE CASTELESS COLLECTIVE மற்றும இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய நண்பர்களுக்கும் அன்பின் முத்தங்கள். Hug you guys…
ஜெய் பீம்!!!

முகநூலில்; கவின்மலர்

The Casteless Collective இசை நிகழ்ச்சி முடிச்சுட்டு வெளிய வரேன். கலவையான நெகிழ்ச்சியான உணர்வுகள்.

ஒன்னு மட்டும் சொல்றேன். ரஞ்சித் செஞ்சுட்டு இருக்கறது சத்தியமாசாதாரண விஷயம் கிடையாது. ரொம்ப பெரிய மாற்றத்துக்கான வீரியமான விதை. உள்ள நுழைஞ்சதுல இருந்து ரொம்ப நிதானமா தெளிவா ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல நோக்கி பயணச்சுட்டு இருக்காரு.

பெருமையா இருக்கு. முந்திலாம் இப்படிப்பட்ட அரசியல் பேசுனா பல தளங்கள்ல வாய்ப்புகள் மறுக்கப்படும்னு சொல்லி பயமுறுத்துனாங்க. அவன் என்னடா மறுக்கறது, நாம இத பேசித்தான் ஆகனும்னு அத செஞ்சு காட்டி நம்பிக்கை கொடுத்துட்டிருக்காரு.

அதுவும் இன்னைக்கு நடந்ததுலாம் உச்சம். சென்னையில் திருவையாறு நடத்துற டைம்ல இதான்டா சென்னையோட வேரு ன்னு நடத்திக் காமிச்சாங்க அந்த பசங்க. கட்டுக்கடங்காத கூட்டமும், லாஸ்ட்ல சினிமால பாக்கற மாதிரி மொத்த பேரும் சேர்ந்து ஆடுனதும், தன்னெழுச்சியா கூட்டம் ஜெய்பீம்னு கத்த ஆரம்பிச்சதும், சாவுல மோளம் அடிப்பேன்… எனக்கு இவ்ளோ பெரிய மேடை கெடச்சுருக்குனு அந்த பையன் கண்கலங்குனதும் மறக்கவே முடியாது. அம்பேத்கர் ன்ற பேர் வரும் போதெல்லாம் பத்து ஹீரோ பேர் சொன்னது போல விண்ணை பிளக்கும் சத்தம். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வு இது. என் பையன கூட்டிட்டு போன முதல் இசை நிகழ்வும் இதுதான்.

சல்யூட் ரஞ்சித். ஜெய்பீம் !!

முகநூலில்; முருகன் மந்திரம்

The casteless collective குழுவினரின் இசை நிகழ்ச்சியை மதுரையிலும் ஒரு முறை நடத்துமாறு அந்த குழுவினரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.😍 இது போன்ற முக்கியமான அரசியல் பண்பாட்டு முன் நகர்வுகள் எல்லாம் சென்னையை மட்டுமே மையம் கொள்வது இனியும் நல்லதுக்கல்ல. தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட வேண்டும்.

(சென்னை தோழர்களின் உற்சாக Postகளை கண்டு பொறாமையில் பொது நலத்தோடு இதை பகிர்கிறேன்😍)

முகநூலில்;திவ்யபாரதி

Related Images: