தமிழ் நாட்டில்,

1938 ஆம் ஆண்டு முதல் மொழிப்போர் ( நடராசன் , தாளமுத்து)
1965 ஆம் ஆண்டு
இரண்டாம் மொழிப்போர்
( கீழப்பளுவூர் சின்னசாமி)
நடைப்பெற்றன.
‘இந்தி ஒழிக’
‘தமிழ் வாழ்க’
என்ற முழக்கங்கள்
தமிழ்த்தெருக்களெங்கும்
ஒலித்தன. அந்த ஈகியர்களின் தியாகங்களை மீறி தமிழகத்தில் 1970 களில் இந்தி திரையிசைப் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும்
ஒலித்தன.
அப்போது சத்தம் இல்லாமல்
ஒரு யுத்தம் இல்லாமல் இந்தி பாடல்களை ஒழித்துக்கட்ட
ஓர் இசைப் புரட்சியாளர்
தோன்றினார். அவர் வந்த பிறகு தான் இந்தி பாடல்கள் வடக்குக்கே வண்டிகட்டின.
தென் திசையின் அன்னக்கிளி உன்னைத்தேடுதே.. பாடல்கள் வட திசையை திரும்பி பார்க்க வைத்தன.
தமிழிசை பாடல்கள் இந்தி தேசத்தையும் மற்ற தேசங்களையும்
முற்றுகையிட்டன. தமிழ் மொழி தெரியாதவர்களையும் தமிழில் பாட வைத்த பெருமைக்குரியவர்.
அவர் தான் ‘இசைராசா’ என்னும்
இளையராஜா!
தமிழிசையை உலகமெங்கும்
கொண்டு சேர்த்தது மூன்றாம் மொழிப்போர்தான்.
மொழிப்போர் தியாகிகள் நாளில்
இளையராஜா அவர்களுக்கு
‘பத்ம விபூஷன்’விருது வழங்கியிருக்கிறது மத்திய அரசு.
இந்த விருது இளையராஜா அவர்களின் உழைப்புக்கும் அறிவாற்றலுக்கும் சிறப்பு செய்யக்கூடியது அல்ல. இளையராஜா கைகளில்
சேர்வதற்காக எத்தனையோ விருதுகள் ஏங்கி கிடக்கின்றன.
– வன்னி அரசு

Related Images: