கவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்

தயாரிப்பாளர் சங்கம் இன்று எடுக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது நடிகர்கள் பர்சண்டேஜ் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அவர்களின் உதவியாளர் சம்பளத்தை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது. நல்ல செயல். வரவேற்கத்தக்கது.

ஆனால் இதெல்லாம் பேசப்படுவதற்கு முன்பே அரவிந்த சாமி முன்பணமாக தனது சம்ளத்தில் எதையும் பெற்றுக் கொள்ளாமல் படம் முடிந்ததும் வாங்கிக்கொள்கிறேன். அதுவரைக்கும் ஏன் வட்டி கட்டுகிறீர்கள் என்ற பெருந்தன்மையோடு நடந்து வருபவர்.

அவருக்கும் நரகாசுரனாக வந்து நிற்கிறார் கவுதம். பாவம் புதுப்பையன். தன் சொந்தக் காசைப் போட்டு படத்தையும் முடித்து.. அரவிந்த் சாமிக்கு சம்பளம் கொடுக்காமல் படத்தின் பேரில் 15 கோடி கடன் வேறு…

வெறும் 5 இலட்சம் கொடுத்துவிட்டு வியாபாரத்தில் சமபங்கு வேறு வேணுமாம்.

இத்தனை தவறுகளையும் செய்தவர் தயாரிப்பாளர் சங்கத்தில் உபதலைவர்.

அரவிந்தசாமி மாதிரி இருக்கும் ஒருசிலரின் நம்பிக்கையை வேரறுத்துவிடாதீர்கள்.

புதிய இயக்குநர்களின் கனவுகளை உங்கள் தந்திரத்தால் சிதைத்துவிடாதீர்கள்.

பந்து சிதைத்த குற்றச்சாட்டு வந்ததும் பதவி விலகினார் ஆஸ்திரேலிய கேப்டன். அதேபோல்
உபதலைவர் என்ற பதவிக்கு நேர்ந்த அவமானம் இது.

இவ்வளவு குற்றச்சாட்டு உள்ளவர் பதவி நீடித்தால்.. நாளை பஞ்சாயத்து என்ற ஒன்று நடக்கும்போது சங்கம் நியாயத்தின் பக்கம் நிற்குமா? அல்லது பதவியின் பக்கம் நிற்குமா?

-தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி