“சிஸ்டத்தை” “மய்யம்” கொண்டிருக்கும் புதிய படம்..

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது.

சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.

இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ்சத்யராஜ்ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

நவரசநாயகன் ஏற்கனவே அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்து அரசியல் சாக்கடை கதிகலங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாமும் குதித்தால் என்ன ஆகும் என்று சூப்பர் ஸ்டார் பெரும் யோசனையிலேயே இருக்கிறாராம்.

இயக்குனரிடம் படம் எதுவும் இந்த புதிய தமிழ் அரசியல் களத்தை குறிவைத்து எடுக்கப்பட இருக்கிறதா ? என்ற போது சிரித்தபடியே சத்யராஜ் பக்கம் திரும்பிப் பார்க்கிறார் இயக்குனர்.