அசீபா எனது மகள்..

இந்த பதிவை போடுவதற்கு முன் பல முறை யோசித்தேன்

இவளை இன்னும் சீர்குலைக்க வேண்டுமா என்று

இருந்தாலும் இதன் வீரியம் பலரிடம் சென்று சேர வேண்டும். சாதாரண இந்துக்கள் பின்பற்றும் இந்து மதம் வேறு, சங்பரிவார்கள் சொல்லும் ,அந்நிய மத வெறுப்பு உமிழும் இந்துத்துவா என்பது வேறு என்பதை சாதாரண மக்களாகிய நாம் வித்தியாசப்படுத்தி அடையாளம் கண்டே ஆகவேண்டும் என்பது இன்றைய சமூகத் தேவையாகிறது.

அவளும் நம் குழந்தை தான். வெறும் இந்து முஸ்லிம் பகையால் இது நடக்கவில்லை. முஸ்லீம்கள் நம்மை கண்டு பயப்பட வேண்டும் என மதவெறுப்பு
இந்துத்துவா வாதம் பேசும் அரசியலால் இது நிகழ்ந்துள்ளது.

ஆம் #ஆசிஃபா என் சகோதரியின் மகள்
__________________

குழந்தை Asifa பற்றிய செய்தி படித்து 2,3 நாட்கள் ஆகிறது. முழுக்கதையும்
தெரிந்து mood out ஆகி, அந்த பிழைத்திருக்கத் தகுதியில்லாத 6
உயிர்களையும் கழுத்தறுத்துப்போடும் அளவுக்கு கோவம். நம் மக்களுக்கு
இதைப்பற்றி படிக்கவும் நேரமில்லாத காரணம். நானும் அமைதி காத்தேன்.

Kathua என்றொரு கிராமம், இந்து முஸ்லீம் பகை. இந்து குடும்பத்தைச்சேர்ந்த
ஒரு பையன் முஸ்லீம் குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணைத் தொந்திரவு
செய்கிறான். அவனை அம்மக்கள் அடித்து உதைத்து திருப்பி அனுப்புகிறார்கள்.
அவனுடைய மாமா அருகிலிருக்கும் சிற்றூரில் அரசியல் முக்கியப்புள்ளி.
ஆவேசப்பட்ட அவர், பழிவாங்கவும், இந்துக்களைக் கண்டால் முஸ்லிம்கள்
பயப்படவேண்டும் எனவும் திட்டமிடுகிறார். கால்நடை மேய்க்கப்போன இடத்தில்
குழந்தை Asifaவைக் கடத்துகிறார்கள்.

கடத்திச்சென்ற குழந்தையை ஒரு கோவிலில் வைத்து வன்புணர்வு செய்கிறார்கள்,
அந்தப்பையனும் அவனது உறவினரும். பின் மயக்கமருந்து கொடுத்து வைத்து,
அவனுடைய மாமனுக்குத் தகவல் போகிறது. அவர் இவர்களைக் காப்பாற்ற தனது
நண்பரான போலீஸ் அதிகாரியை அழைக்கிறார். பின் திரும்ப கோவிலில் இருக்கும்
குழந்தையை மீண்டும் வன்புணர்வு செய்து கொல்கிறார்கள். வெளியே
குழந்தையைத்தேடும் பணி தீவிரமாக இருப்பதால், குழந்தையின் உடலில்
இருக்கும் வன்புணர்வு அடையாளங்களை அழிக்க உடலின் பிறப்புறுப்பு முதல்
எல்லா இடங்களையும் சிதைக்கிறார்கள். பின் காட்டுக்குள் சென்று உடலை
வீசிவிட்டு நல்லவர்கள் போல் ஊருக்குள் சென்றுவிடுகிறார்கள்.

நிற்க. இது பாதிதான், இன்னும் கொடுமை முடிந்தபாடில்லை. உடலைக் கைப்பற்றிய
போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து துணியைத்துவைத்து அடையாளங்களை
அழித்திருக்கிறார்கள். இருப்பினும் கோவிலில் கிடைத்த தலைமுடியில்
இருக்கும் DNA வைத்து அது குழந்தை Asifaஉடையது என்று கண்டறிந்து,
இந்தக்கயவர்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் லோக்கல் புள்ளிகள்
என்பதாலும், அதிகாரத்தை உபயோகித்தும் charge sheetகூட இல்லாமல்
தாமதப்படுத்தி, பின் போராட்டம் வெடிக்கவே தற்போது வழக்குப்பதிந்து கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற அங்குள்ள
இந்துத்துவா வழக்கறிஞர்கள் ஏகப்பட்ட தடைகளைப்போட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.

கைதுக்குப்பிறகு கைது செய்யப்பட்டவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்
உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்.ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுதலை
செய்யவேண்டு மென்று. அதுவுமில்லாமல், அந்தப்புள்ளி தன்னுடைய மருமகன்
மாட்டினாலும் கவலையில்லை, நீ மைனர்தான், தப்பித்துவிடுவாய் என்று கூறி
அவனையும் இதில் உடன் இணைத்திருக்கிறார். இத்தனை செய்ததற்கும் அவர்கள்
கூறியிருக்கும் காரணம் என்ன தெரியுமா??

இந்துக்களைக் கண்டால் அந்த முஸ்லிம் மக்கள் பயப்படவேண்டுமென்று.

வேறு எல்லாவற்றையும் விடுங்கள், ஒரு குழந்தையை இவ்வளவு கொடூரமாகக்
கொன்றதற்கு கட்டாயம் இதில் செயல்பட்ட, சம்மந்தப்பட்ட, காப்பாற்ற முயலும்
அனைவரையும் ஈவிரக்கமின்றிக் கொல்லவேண்டும்.

ஆனால் நம் சட்டத்தைப் பற்றி நினைக்கையில் இன்னமும் சொல்லொணாக்கோபம்
வருகிறது. மேலே சொல்லியிருக்கும் அனைத்தும், பல்வேறு செய்திகளின்
வழியாகவும், அப்பகுதியைச் சேர்ந்த உடன் பணிபுரியும் ஒருவரிடமும்
முழுதாகத் தெரிந்துகொண்டுதான் பேசியிருக்கிறேன்.

எங்கே இருக்கிறது மனிதநேயம், மதங்களை விடுத்துப்பார்த்தாலும்
மன்னிக்கமுடியாத குற்றம்.

இது இரு குடும்பத்தினரிடையே நிலவிய பிரச்சினையால் நடந்திருக்கும்
என்றிருந்தால் அது காவல்துறை பிடித்து தண்டிப்பதால் நீதி ஏதோ
நிலைநாட்டப்படும் என சமாதானமாகலாம். ஆனால் அடுத்த மதத்தவன் பயப்பட
வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மதவெறுப்பு நிலையின் வெளிப்பாடாக
வந்திருக்கிறது. இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்துத்துவா
அரசியல்வாதிகள் போராடுவதில் இருந்து இதன் அரசியல் தன்மை உணரப்படும்.

இதற்குப்பேர்தான் பாஜக சொல்லும் ராமராஜ்யமா? இத்தனை பெரிய
கொலைக்குப்பின்னும் கள்ள மௌனம் காக்கும் அரசு என்ன சாதிக்கப்போகிறது?
அக்கோவிலில் இருந்ததுதான் கடவுளா?

கண்முன்னே ஒரு குழந்தை இத்தனை சித்திரவதைப் பட்டதைக் கண்டும் காப்பாற்றாத
பிறகு அது என்ன மயிரு கடவுள்?

இது இந்து என்பதால் செய்யப்பட்டதல்ல. இந்துத்துவா பரப்பும் அந்நிய மத
வெறுப்பு உள்ளுக்குள் ஏற்றப்பட்டதால் நிகழ்ந்தது.

எனவே இந்துக்களே, இந்துத்துவா சக்திகள் பரப்பும் மாற்று மத வெறுப்பு
விஷயங்களுக்கு ஆளாகிவிடாதீர்கள்.

வெறும் இந்துவாக மட்டும் இருந்தாலே போதும். வெறுப்பு வளர்க்கும்
இந்துத்துவா ஆளாக தயவு செய்து மாறிவிடாதீர்கள்.

இது போன்ற பயங்கரங்கள் இனியும் நடைபெறவேண்டாம்.

#Need_Justice_for_Asifa
#அஸிஃபா
———————————————————————–
ஜம்முவில் கத்துவா பகுதியில் கூட்டு வல்லுறவு மற்றும் படுகொலைக்கு ஆளான
பகர்வால் எனும் இஸ்லாமிய நாடோடி இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி
ஆஷிபாவின் மரணத்தில் அதிர்ச்சி ஊட்டுபவை, அவளுக்கு அப்போது நேர்ந்தது
மட்டுமல்ல, அதற்கு முன்னும் பின்னும் நேர்ந்தது இன்னும் கொடுமை.

1) ஜனவரி 10ம் தேதி தன் கிராமத்துப் புல்வெளியில் குதிரைகள்
மேய்த்துக்கொண்டிருந்த (அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு)
ஆஷிபாவைப் பிடித்து ஒரு கோவிலில் சஞ்ஜு ராம் (!) என்கிற ஒரு அர்ச்சகர்
தான் அடைத்து வைத்திருக்கிறார். அதற்கு இரண்டு சிறுவர்களைப்
பயன்படுத்தியிருக்கிறார் சஞ்ஜு ராம்.

2) மயக்கமருந்து கொடுத்து பட்டினி போட்டு ஒரு வாரத்துக்கு மேல் வைத்து 6
பேர் (2 சிறுவர்கள் உட்பட) கூட்டு வல்லுறவு நடத்தியிருக்கின்றனர்.

அவர்களில் தீபக் கஜூரியா என்கிற முஸ்லீம் வெறுப்பும் தேசப்பற்றும்
நிறைந்த காவல் அதிகாரியும் ஒருவர்.

ஜம்முவில் இருந்து வெளியூர் போன ஒரு சிறுவனை தொலைபேசியில் அழைத்து
“பசியைத் தீர்த்துக்கொள்ளும்படி” அழைக்கவே, அவனும் இவர்களும் சேர்ந்து
கொண்டான்.

ஆஷிபாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, அவள் இறந்து விட்டாள் என்பதை
உறுதி செய்ய அவரது தலையை ஒரு பெரிய கல்லால் அடித்துச்
சிதறடித்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகும் அவர்களில் ஒருவர் ஆஷிபாவை பலாத்காரம் செய்திருக்கிறார்.

3) ஆஷிபாவின் உறவினர்கள் சிறுமியைக் காணோம் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய
போது அவர்களைத் தடியடி நடத்தி விரட்டிய காவல்படையில் தீபக் கஜுரியாவும்
இருந்தார் என்பது இன்னும் கொடுமை.

3A) சஞ்ஜி ராம் தனக்கு உதவியாக வைத்துக்கொண்ட சிறுவர்கள் மற்றும்
இளைஞர்களின் பெற்றோரை மிரட்டி/பயமுறுத்தி பணமும் வசூலித்திருக்கிறார்.

4) உள்ளூர் காவல்துறையினர் கொலைக்கான சாட்சியங்களை அழித்ததோடு
சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுத்தனர். சஞ்சி
ராம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதப்பற்று, தேசப்பற்று ஆகியவற்றோடு
காவல்துறையினருக்கு பணமும் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்.

5) பல மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு, மாநில முதல்வரின்
இடையீட்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் கிரைம் பிராஞ்ச் சாஞ்ஜி ராம் உட்பட
6 பேரைக் கைது செய்தவுடன் அவர்களுக்கு ஆதரவாக பாஜக மந்திரிகள் இருவர்
தலைமையில் இந்து ஏக்தா மஞ்ச் எனும் பெயரில் உள்ளூர் இந்துக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இஸ்லாமிய நாடோடிகளை பயமுறுத்தி அங்கிருந்து விரட்டுவதற்காகத் தான் இது
நடத்தப்பட்டது என்றும் இது இந்திய ராணுவமும் காவல்துறையும் ஜம்மு
காஷ்மீரில் வழக்கமாக செய்வது தான் என்று இதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள்
என்றும் வாதம் எழுப்பப்பட்டது.

6) இதையும் மீறி இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர்
முற்படும் போது ஜம்மு பார் கவுன்சில் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது
இன்னும் கூடுதல் கொடுமை.

7) இப்போது இந்தச் சிறுமிக்கு எதிராக சங் பரிவாரும் தேசபக்தர்களும்
பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

8 ) குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பரிசும் பாராட்டுக்களும் குவியும்.

8A) கோயில் அர்ச்சகர் சஞ்ஜு ராம் எம்.எல்.ஏ. வோ எம்.பி.யோ ஆகலாம்.
பிரதமர் கூட ஆகலாம். அவருக்கு எல்லாத் தகுதியும் இருப்பதை இந்துக்கள்
அறிந்து பெருமையுடன் அவருடன் வாக்களிக்கலாம்.

9) நடுநிலைவியாதிகள் இந்தியா வாழ்க என்று வாந்தி எடுப்பார்கள்.

10) நாம் சுரணையற்று இந்த நாட்களைக் கடந்து போவோம்.

-Amudhan Ramalingam Pushpam

#RamaRaajyam #RSSTerrorism #HindutvaRapists #JusticForAsifa