நோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன்’ ஆகிய இரு மெகா தோல்விப் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இப்படத்தின் ஆடியோ டீஸர் வெளியீட்டுவிழாவின் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவே டாட்டா காட்டி தலைமறைவானார்.

படத்தை 50 நாட்களில் முடிப்பதாகச்சொன்ன இயக்குநர் 88 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி தயாரிப்புச்செலவை தாறுமாறாக்கியதாலும், படத்தின் ரிசல்ட் பரிதாபமாக இருந்ததாலும் ஞானவேல்ராஜா விழா சொல்லாமல்கொள்ளாமல் எஸ்கேப் ஆனதாகத்தெரிகிறது.