மூளையை முற்றிலும் கழட்டிவிட்டுப்பார்க்கவேண்டிய ‘சீமராசா’

பத்து ரஜினி, ஒரு கமல். இருபது அஜீத், நாப்பது விஜய் படங்களுக்கு தேவையான மசாலா அயிட்டங்களுடன் ரிலீஸாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘சீமராசா’ அவரது சாமத்தூக்கத்துக்கு சங்கு ஊதும் படமாக வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

துறுதுறு சமந்தாவைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் சி.கா.வின் நடிப்பாகட்டும், பரோட்டா சூரியின் காமெடியாகட்டும், படத்தின் மற்ற அம்சங்களாகட்டும் எடைக்குப் போடக்கூட லாயக்கற்றவை.

சி.கா.வின் சம்பளம் சேர்க்காமல் சுமார் 50 கோடிக்கும் மேல் வாரியிறைக்கப்பட்ட இப்படத்தின் வசூல் இரண்டாவது நாளே நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், விநியோகஸ்தர்களிடம் அவர் பெருங்கடனாளியாகும் வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறான் சீமத்துரை.

எவ்வளவு சீக்கிரம் மக்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறார்களோ, அதைவிட சீக்கிரமாக தூக்கியெறிந்தும் விடுவார்கள் என்பதை சிகா உணரும் வேளை வந்துவிட்டதாகவே தெரிகிறது.

கொஞ்சமே கொஞ்சூண்டாவது கதை இருக்கிற படமா பாத்து நடிங்க பாஸ்.

விஜய் டி.வி.யில வேற இப்ப வேகன்ஸி இல்லைன்னு சொல்றாங்க.