ஹெச்.ராஜா,எஸ்.வி.சேகர் ஆசியுடன் கருணாஸ் கைது

சசிகலா,தினகரன் கோஷ்டி உசுப்பிவிட வள்ளுவர்கோட்டம் பொதுக்கூட்டத்தில் கன்னாபின்னாவென்று பேசிய நடிகரும்,எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தளபதியுமான கருணாஸ் இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் போலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காவலுக்கு உடனிருந்த தளபதிகள் தெறித்து ஓடினர்.

பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மூன்றுமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்த காவல் நிலையத்தில் இருந்து கருணாஸ் அழைத்து வரப்பட்டார்.

கருணாஸை கைது செய்வதில் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளைவிட, தேசிய வியாதி ஹெச்.ராஜாவும், உள்ளூர் வியாதி ஹெச்.வி. சேகரும் அதிக முனைப்பு காட்டியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் செப்புகின்றன. போகிற போக்கில் மேடைப்பேச்சில் உளறிக்கொட்டுவதில் தங்களை மிஞ்சிவிடுவாரோ என்று அஞ்சியே அவர்கள் இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்றும் அதே நம்பத்தகாத வட்டாரங்கள் நம்புகின்றன.