இசை – இலக்கியன். பாடல்கள் – வைரமுத்து
இலக்கியன் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இவரது முதல் படம் இதுவா? தெரியவில்லை.
பாடல் ட்யூன்கள் ஏற்கனவே கேட்டவை தான். புதிதாய் ஏதும் தென்படவில்லை.
வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த ஜாம்பவான் கவிஞர் ரொம்ப சிரத்தை
ஏதும் எடுத்துவிடவில்லை என்று தெரிகிறது.
1. ஒற்றைப் பனித்துளி – பிரசன்னா, சைந்தவி
மெலடி டூயட்டாக வரும் பாடல். கேட்கும் படி இருக்கிறது. வைரமுத்து வரிகள் ஓகே. ஹிட்டாகலாம்.
2. ஒரு பொண்ணப் பாரு – ராகுல் நம்பியார், ஷாம் பி கீர்த்தன்.
வெஸ்டர்ன் டைப் ஜாலி பாடல். ஓகே ரகம். ‘நாட்டுக்குள் அணுமின் நிலையம் கூடாதென்று சிலபேர் சொல்ல கண்ணுக்குள் அணுமின் நிலையம் கொண்டாய்’ – என்று வைரமுத்து அரசியல் வரிகளைத் சும்மா மேலுக்கு தடவிச் செல்கிறார். கவிப் பேரரசுக்கு ஒரு அரசியல் கருத்து சொல்ல அவ்வளவு பயமா ?
3. மண்ணை நம்பலாம் – ஷாம் பி கீர்த்தன்.
வழக்கமான பெண்களே மோசம் என்று காதலன் தோல்வி சோகத்தில் பாடும் பாடல். வழக்கமான ட்யூன்.
4. டிம்ப டிம்பா – மனசி ஸ்காட்
வழக்கமான டப்பாங்குத்துப் பாடல். கேட்கும் மாதிரி தான் இருக்கிறது.
5. ஒரு கூட்டுப் புழு – பத்மலதா 1.51
பெண்கள் சுதந்திரம் பற்றி மாடர்னாக வரும் சிறிய பாடல். கேட்கலாம்.
6. ஓ நெஞ்சே நெஞ்சே - ஹரிச்சரண்
காமத் தீயில் விழுந்துவிட்ட காதலர்களின் உடல் வேட்கை பற்றிய பாடல். தொடர்ந்து கதையின் ஓட்டம் பற்றி வரும் வரிகளும் உண்டு. ஹரிச்சரண் பாடியிருக்கிறார். இந்த டைப்பில் ஏற்கனவே கேட்ட பாடல்களின் டைப்பில் மற்றுமொரு பாடல்.
ஆக மொத்தத்தில் ஏற்கனவே கேட்ட ட்யூன்களில் வேறு வித கோர்வைகளில் ஏற்கனவே கேட்ட வகைப் பாடல்கள்.
இலக்கியனின் புதிய இசை புதிய இலக்கியமல்ல.
Related news items:
Newer news items:
Older news items:
- ஆதிபகவன் இசை- பருத்திவீரனில் பாதி உயரம். - Wednesday, 17 October 2012
- சுந்தரபாண்டியன் - பாடல்கள், ஆடியோ ஒரு பார்வை - Monday, 27 August 2012
- ஒரு கல் ஒரு கண்ணாடி: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்... - Saturday, 10 March 2012
- இசைஞானிக்காக உலகம் சுற்றக் கிளம்பும் பவதாரணி - Wednesday, 22 February 2012
- ஹாரிஸ் என்றொரு நேர்மையான இசையமைப்பாளர் - Tuesday, 27 December 2011




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.