சென்ற தேர்தலில் தன்னுடன் பர்சனலாக மோதிய விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்காக திமுக மேடைக்குச் சென்ற வடிவேலு அந்தத் தேர்தல் சூடு முடிந்ததும் தான் பேசிய கட்சிகளே தன்னை மறந்து விட்டதைக் கண்டு மிகவும் நொந்து போய் இனிமேல் ஜென்மத்துக்கும் எந்தக்
கட்சி சாயலும் தன் மேல் படிந்துவிடக்கூடாது என்று விரும்புகிறார்.
அதற்கான வாய்ப்பு அம்மா பக்கமிருந்து கிடைக்குமானால் அதைச் சரிசெய்து விடவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
"காலேஜூக்கெல்லாம் போகணும் பெரிய படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அப்பாவால எங்களைப் படிக்க வைக்க முடியலை. காரணம் வறுமை. நிறைய பேர் இருக்கிற குடும்பம். அதுல அப்பாவோட சம்பளம் மட்டும் பத்தலை.
அதனால நானும் என் மூன்று தம்பிகளும் சின்ன வயசிலயே கண்ணாடிக் கடைக்கு வேலைக்குப் போனோம். கண்ணாடிகளை ஒரு குறிப்பிட்ட சைஸில் அறுக்கின்ற வேலை.
எங்கப்பாவும் கூட கண்ணாடி கடைல தான் வேலை பார்த்தாரு. ஆனா அவர் கண் முன்னாடி நாங்க கஷ்டப்படுறதை பார்க்க வேணாம்னுட்டு எங்களை வேற கண்ணாடிக் கடைல சேர்த்து விட்டாரு.
கண்ணாடி அறுக்குறது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. கத்தியை வெச்சு வெட்டும் போது லேசாப் பிசகினாலும் கையில் ரணம் தான். எங்கள் கைகளிலும் உடம்பிலும் கண்ணாடிச் சில்லுகள் குத்திய, வெட்டிய வடுக்கள் நிறைய இருக்குது.
சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 2 குரோஸ் அதாவது 240 துண்டு கண்ணாடி அறுத்தால் 40 ரூபாய் கூலி. காலைல ஏழுமணிக்கே நாங்க நாலு பேரும் வேலைக்குப் போயிடுவோம். எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் பூரா அறுத்தாத் தான் 2 குரோஸ் கண்ணாடி அறுக்க முடியும்.
இதில் நாங்கள் காலைலயே 10 அல்லது 20 ரூபாய் அட்வான்ஸ் மாதிரி வாங்கி வீட்டில குடுத்துடுவோம். அதை வெச்சி அரிசி வாங்கித் தான் அன்றைய சாப்பாடு ரெடியாகும்.
சில சமயம் கார்ட்போர்ட் அறுத்து கண்ணாடிய பிட் பண்ற வேலையும் தருவாங்க. கார்ட் போடு அறுத்து அந்தத் தூள் மூக்கு வழியா சுவாசிச்சு சுவாசிச்சு என் தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளியாயிட்டான்.
உடம்புல நோவுன்னாக்கூட லீவு எடுக்க முடியாது. மாத்திரையப் முழுங்கிட்டு வந்து மாங்கு மாங்குன்னு கண்ணாடி அறுப்போம். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பதிமூன்று வருஷம் கண்ணாடிக் கடையில வேலை பார்த்தோம்.
அந்தக் கஷ்டமான காலங்களை இப்பவும் மறக்க முடியாது என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்து கூறுகிறார் வடிவேலு.
நம்மை நன்றாக சிரிக்க வைத்த வடிவேலுவின் பழைய நிஜ வாழ்க்கை அவ்வளவு கடினமானது.
Related news items:
Newer news items:
Older news items:
- ’ அஜீத் கேட்டால் அவர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவேன்’ –இங்கி விங்கி ஸ்ரீதேவி - Friday, 19 October 2012
- ஒரு கலைத் தேவதைக்கு உயிர் ரசிகன் எழுதிய காதல் கடிதம். - Sunday, 23 September 2012
- ’'அவர்தான் பாலாஜி சக்திவேல்.சும்மா ஒரு வணக்கம் வச்சிட்டு வா’’-மஹந்தா என்றொரு மங்காத்தா - Wednesday, 11 April 2012
- ‘ என் படத்துல கதையே இல்லை’- ‘ஊ ல லா’ ஜோதிகிருஷ்ணா ஓபன் பேட்டி - Saturday, 07 April 2012
- ’பிரபுதேவா இல்லை என்று போனாலும் அந்த வாழ்க்கையை நான் வாழத்தான் வேண்டும்’- நச் நயன்தாரா - Monday, 02 April 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.