ஒரு படம் துவங்கும்போது, பொதுவாக, கொஞ்சநேரம் கதை நடக்கும் லொகேஷனையும், கதை மாந்தர்களையும் அரசல்புரசலாக அறிமுகப்படுத்துவார்கள்.
ஆனால் ஒரு ரெண்டேகால் மணிநேரத்தில், ரெண்டுமணிநேரம் மேற்படி சமாச்சாரத்திற்கே முழுக்கவனம் செலுத்தி நம்மை அநியாயத்துக்கு
சோதிக்கிறார் பிரபு சாலமன்.
தகுதிக்கு மீறி பணமும் புகழும் சேர்ந்துவிடுகிறபோது பெரும்பாலான மனிதர்களிடம் பக்தி பற்றிக்கொள்கிறது. ‘சாட்டைக்குப் பிறகு இதிலும் ‘தேங்க் யூ ஜீஸஸ்’ என்று போட்டபிறகுதான் கதையையே ஆரம்பிக்கிறார் சாலமன்.
ஒரு மலைகிராமம். மதம் பிடித்த கொம்பன் யானை ஒன்று அவர்களது வெள்ளாமையை நாசம் செய்துவிட்டு, ஜனங்களையும் கொன்றுபோட்டுவிட்டுக்கொண்டிருக்க, அதை அடக்கி விரட்ட ‘கும்கி’ யானை ஒன்றை அமர்த்த கிராமத்தார் முடிவு செய்கிறார்கள். கதையில் சுவாரசியம் வேண்டுமே?
‘உள்ளத்தில் பூனையடி’ ரேஞ்சில் இருக்கும் விக்ரம் பிரபுவின் யானை,மாணிக்கம் மலைகிராமத்துக்கு வருகிறது. மலைப்பூ,மலைவாசனைதிரவியங்கள், மலைத்தேன் மாதிரி விஷேசமான மலைஜாதிப்பெண்ணான லட்சுமி படுகா மேனனைப் பார்த்ததும் கொம்பன் யானையை விட சற்று அதிகமாகவே மதம் பிடித்து சுற்றிச்சுற்றி வருகிறார் ஜூனியர் பிரபு.
லட்சுமி-விக்ரம் பிரபு காதல் கைகூடியதா? கொம்பன் யானையை நம்ப சும்பன் யானை மாணிக்கம் விரட்டி அடித்ததா? மலைஜாதி மக்கள் அப்புறம் சுபிட்சமாக வாழ்ந்தார்களா?’- போன்ற கொடிய கேள்விகளுக்கு விடியவிடிய விடைதேடுவதுதான் ‘கும்கி’யின் கதை.
படத்தின் ஒரிஜினல் நாயகன் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் சுகுமார்தான். யானைக்கு வைத்திருக்கும் பரிதாப ஷாட்கள் தவிர்த்து, படமெங்கும் தனது அபார உழைப்பால் வியாபிக்கிறார்.
ரொம்ப நாளைக்குப் பிறகு காதுகொடுத்துக்கேட்கும் தரத்தில் இமானின் பாடல்கள். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அப்பா பிரபுவுக்கு ராஜா போட்ட ராகங்களை உரிமையோடு உருவியிருக்கிறார்.
தாத்தாவைப்போலவே எல்லோருக்கும் முதல் படமே ‘பராசக்தி’யாக அமைந்துவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்பா பிரபுவே நல்ல நடிகர் என்று பேர் வாங்க சில டஜன் படங்கள் நடிக்கவேண்டி இருந்தது. படத்தின் முக்கால்வாசி இடங்களில் எதையோ பறிகொடுத்தமாதிரியே முழிக்கும் ஜூனியர் பிரபு மிகவிரைவிலேயே கரையேறி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக அங்கங்கே தென்படுகின்றன.
மேக்கப் மற்றும் கட்டுக்கோப்பான உடைகளைப் பார்த்து லட்சுமி மேனனை மலைஜாதிப்பெண்ணாக ஏற்க மனசு மறுக்கிறது.
சுகுமாருக்கு அடுத்தபடியாக, படத்தின் இன்னொரு ஆறுதல் பரிசு தம்பி ராமையா.சரக்கு எதுவும் இல்லாத வறட்சியான காட்சிகளிலும், இல்லாத முறுக்கு காட்டி, எதையாவது ஸ்கோர் பண்ணிக்கொண்டே இருக்கிறார். [அய்யா ராமையா இனிமே நீங்க உங்க பேரை அண்ணன் ராமையான்னு மாத்திக்கங்கன்னு வேண்டிக்கிறது உங்க சிவய்யாய்யா]
தமிழ்சினிமாவில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களெல்லாம் அடுத்து வீணாகப் போகவேண்டுமென்று எங்காவது பில்லி சூன்ய வேலையில் யாரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று தீவிரமாக ஆராயவேண்டிய நேரம் இது. இல்லையென்றால் இத்தனூண்டு ‘மைனா’வில் புலிப்பாய்ச்சல் காட்டிய பிரபு சாலமன் ‘கும்கி’ யானையை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு கொசுவைப் பிடித்துவிட்டுத் திரும்பியிருப்பாரா?’
ஒரு முக்கிய பின்குறிப்பு: டைட்டில் கார்டை மிக கவனமாகப் படித்தபோது’ இந்தப் படத்தில் இடம்பெற்ற உதவி, இணை, துணை இயக்குனர்களின் எண்ணிக்கை 18-ஐத்தொட்டது. இவங்கள்ளெல்லாம் ஆளுக்கு அரை சீன் சொல்லியிருந்தாலே படத்துல ஒன்பது சீனும் ஓரளவு கதையும் இருந்திருக்குமே என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். ஆனால் இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும். நீங்கள் கேட்டால் சொல்கிறேன்.
Related news items:
Newer news items:
- விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’தற்கொலை பண்ணிக்க வாரீகளா?’ - Monday, 22 April 2013
- மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன். - Friday, 22 March 2013
- ’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ் - Tuesday, 19 February 2013
- விமரிசனம்: ‘கடல்’ – உடல் நலத்திற்கு தீங்கானது - Monday, 04 February 2013
- விமர்சனம் ‘சமர்’- இதையே நீங்க, ஒன்ஸ்அகெயின், மறுபடியும், திரும்பத்திரும்ப ரிபீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம் பாஸ். - Wednesday, 16 January 2013
Older news items:
- விமர்சனம் ,'துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க - Wednesday, 14 November 2012
- விமர்சனம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’- ’வாவ் வாட் எ லவ்லி டைரக்டர்’ - Saturday, 06 October 2012
- விமரிசனம் ’சாட்டை’யில் சில ஓட்டைகள் ஆனாலும்… - Friday, 21 September 2012
- விமர்சனம்,’மன்னாரு’- ஓரளவுக்கு நன்னாரு’ க்குறாரு - Thursday, 06 September 2012
- விமர்சனம் ‘மதுபானக்கடை’ – ‘இவிங்க ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்காய்ங்க’ - Saturday, 11 August 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’



Comments
நெஞ்சு கொதிக்கும். கொதிக்கிறது.
கேட்கிறேன் சொல்லுங்கள்..
please tell us why he had 18 assistants
RSS feed for comments to this post