Wednesday, May 22nd

Last update12:29:54 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: Cricket பான்-கி-மூன், விஜய் நம்பியார் - இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகள்!!

பான்-கி-மூன், விஜய் நம்பியார் - இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகள்!!

srilanka-warcrimes-bankimoon-vijaynambiar-conspiracy
thirumurugan-may17-movement
  • Prev
  • 1 of 2
  • Next

2009ல் ஈழப் படுகொலைகளை சிங்கள ராணுவம் நடத்திய போது அது விடுதலைப் புலிகளுடனான போர் என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.

அப்போது ஐ.நா. சபை மக்கள் மீட்புக்கு ஐநா உதவிக்குழுவை அனுப்பி வைத்தது. போரில் காயமடைந்த மக்களையும், வீரர்களையும் உணவும்,

மருந்தும் அளித்து காப்பாற்றி வந்தது. ஆனால் இலங்கை அரசு வெளியேறுங்கள் என்று மிரட்டியதும் ஐ.நா. சபை குழு எதிர்ப்புக் கூட காட்டாமல் திரும்பி வந்துவிட்டது.

இது போல செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவமனைகள் மீதான விமானத் தாக்குதல், ஐ.நா. உறுப்பினர்களின் மீதான தாக்குதல் போன்றவை நடந்தும் ஐ.நா இலங்கையைக் கண்டிக்க முன்வரவே இல்லை. அறிக்கையில் கூறப்பட்ட தீர்மானங்கள் கூட இலங்கையின் படுகொலையை நியாயப்படுத்தும் போக்கிலேயே இருந்தன.

இந்தியாவில் இருந்த தமிழர்கள், இடது சாரிகள் உட்பட ஐ.நா சபையின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வேளையில் தான் தற்போது ஐ.நா.வின் முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலர் பான்-கி-மூனும் மற்றும் இலங்கைக்கான ஐ.நாவின் தூதுவராய் இருந்த விஜய் நம்பியார்(மலையாளி) மற்றும் போரின் போது ஐநாவின் மனித உரிமைப் பிரிவின் தலைவராய் இருந்த ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் ஐ.நாவில் இருந்தபடியே இலங்கை நடத்திய இனப்படுகொலையை பாதுகாத்ததோடு ராஜபக்சேவுக்கு ஐநாவிலிருந்து தீவிரவாதத்தை அடக்கியதற்காக பாராட்டு பத்திரமும் வாசித்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் போரில் ஐ.நா.வின் பங்கு இருக்குமோ என்கிற ஐயம் 2009 லேயே எழுந்துவிட்டிருந்தது. எனினும் தற்போது தான் அதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சென்னையிலுள்ள மே 17 இயக்கம் தமிழர்களுக்காக, முக்கியமாக ஈழத் தமிழர்கள் நலனுக்காகப் போராடி வரும் இயக்கம். இதன் ஒருங்கிணைப்பாளர் திரு மற்றும் உமர் ஆகியோர் கொண்ட குழு ஒன்று, 2008 செப்டம்பர் முதல் 2009 மே மாதம் வரை நடந்த போர் மற்றும் படுகொலைகளை எவ்வாறு இந்த ஐ.நா. பிரமுகர்கள் பாதுகாத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.

இவற்றை வெளியிட்டும், இதனை முன் வைத்து பான்-கி-மூன், விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோரை போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரியும் போராடத் துவங்கியுள்ளது.

டிசம்பர் 16, ஞாயிறன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஈழப் படுகொலைகளில் ஐ.நாவின் பங்குபற்றி ஆராய்வது பற்றியும், இதை தமிழ்நாடெங்கும் எடுத்துச் செல்வது பற்றியும் வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தியாகு, தீரன், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பெரியார் திராவிட கழக கட்சி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தக்  கட்சிகளினஅ ஆதரவுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் பேசினர்.

ஜனவரி 15, 2009க்குப் பின் போர் நடந்த பகுதிக்குள். இருந்த மக்களைக் காக்க ஐ.நா உணவுப் பொருட்களோ, மருந்துகளோ அனுப்பவே இல்லை என்றும் அதனால் உணவு மற்றும் மருந்துகளின்றியே பல்லாயிரக்கணக்கானோர் இறந்து போயுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் போர் முனைக்குள் அனுப்பப்பட்டிருந்த ஐநா குழுவினர் இலங்கை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் காயம் பட்டும், உயிரிழந்தும் போயுள்ளனர். அத்தகைய இக்கட்டான நிலையை விளக்கி போர்முனையில் குண்டுகளுக்கிடையே அவர்கள் ஐ.நா. தலைமையிடத்துக்கு குறுஞ்செய்திகள்(SMS) அனுப்பியிருந்திருக்கின்றனர். அதை ஐநா அலுவலகம் அப்படியே கண்டுகொள்ளாமல் அமுக்கி விட்டதுடன் அது பற்றி பேசவும் மறுத்துவிட்டது.

அவற்றையெல்லாம் மே 17 இயக்கத்தினர் சேகரித்துள்ளனர். அதைப் போல பான் கி மூனுக்கு விஜய் நம்பியார் எழுதிய ஈமெயில் ஒன்றும் கிடைத்துள்ளன. அந்த ஈமெயிலில் சிங்கள அரசை பகைத்துக் கொள்ள வேண்டாமென்று ஐநா அதிகாரிகளுக்கு சுற்று அனுப்பியுள்ளார் அவர்.

அதே போல இறந்து போனவர்களைக் கணக்கெடுப்பதை சிரமமென்று சொல்லி அதனால் கணக்கைக் காட்டவேண்டாமென்றும், அப்படியே கணக்கு காட்டும் பட்சத்தில் அவர்கள் சிங்களரால் கொல்லப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களாக கணக்கில் காட்டும்படியும் ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஐ.நாவிலிருந்து ஈழப் பிரச்சனை சம்பந்தமாக வரும் எந்த அறிக்கைகயையும் சிங்களரின் பக்கமிருக்கும் தவறுகளை மறைத்து சொல்லும்படியும், அவற்றை சொல்ல நேரும் நேரங்களில் விடுதலைப் புலிகளையும் சேர்த்துச் சொல்வதன் மூலம் விடுதலைப் புலிகளின் மீதான தவறுகளை மட்டுமே பூதாகாரப் படுத்தி காண்பிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போல 2009ன் ஆரம்பங்களில் ஐ.நா.ஈழப் பிரச்சனையைப் பற்றிப் பேச ஆரம்பித்த போது நடந்த ஐ.நா. உறுப்பினர்கள் கூட்டத்தில் யார் என்ன முடிவெடுத்தார்கள் என்பதை அப்படியே மறைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அப்படி வெளியிடப்பட்ட அறிக்கையிலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்று போய்விட்டார்கள்.

இதில் முக்கிய விஷயம் போர் நடந்த காலத்தில் விஜய் நம்பியார் ஐ.நாவின் அமைதிக்கான தூதுவராய் இருந்த போது இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் என்பவர் தான் ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பு ஆலோசகராக இருந்துள்ளார்.

அத்தோடு பான்-கி-மூனின் மருமகன் ஒரு இந்தியர். அவர் பெயர் சத்தார் சிங். இந்த சத்தார் சிங் இந்திய ராணுவத்தில் ஒரு ஜெனரல். இவர் தற்போது ஏதோ வெளிநாட்டுத் தூதுவராய் இருக்கிறார். இவர் ஜெனரலாய் இருந்த போது இவர் தலைமையிலான படை இலங்கைக்கு அமைதிப் படை என்கிற பெயரில் பல அட்டூழியங்களைச் செய்திருக்கிறது. அத்தோடு 80களில் இந்திய அமைதிப் படை காலத்தில் விடுதலைப் புலிகளை கொல்ல அனுப்பிய இவருடைய கமாண்டோ படையில் இவரையும், இன்னும் ஒருவரையுந் தவிர மற்ற எல்லோரும் இறந்து போயினர்.

அதைப் போல தமிழ்நாட்டுத் தலைவர்களை மடக்கி (யார் என்று உங்களுக்கே தெரியும்) தமிழ்நாட்டில் எதுவும் மக்கள் எழுச்சி நடந்துவிடக் கூடாது என்பதற்காக எவ்வாறெல்லாம் ‘கவனி’த்தார்கள் என்று பல விஷயங்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே ஐ.நா ஈரான், ஈராக், பாலஸ்தீனம், குர்து, டார்புர் போன்ற பிரச்சனைகளில் எவ்வாறு நடந்துகொண்டது ? அதன் உண்மையான நோக்கம் அமெரிக்க, பிரிட்டன் குரூப் அரசுகளின் பிராந்திய நலனைக் காக்க மட்டுமே என்பது வெளிச்சமாகியுள்ளது.

எகிப்தில் கிறித்துவர்களை இழிவு படுத்தும் ஒரு மோசமான குறும்படத்திற்கு பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து போராடியதைப் போல தமிழர்களாகிய நாமும் பல்லாயிரக்கணக்கில் இணைந்து போராடினால் மட்டுமே ஐ.நா போன்ற பெரும் நிறுவனங்களை கண்டித்தும், எதிர்த்தும் செல்ல முடியும்.

மே 17 இயக்கம் அந்த முயற்சியை எடுத்திருக்கிறது.

நம் மானாட மயிலாட தமிழர்கள் அந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்களா ?  அளிப்பார்கள், அளிக்க வேண்டும்.

--அம்பேதன்(ambedhan.blogpsot.com)

Share

Add comment

வாசகர் கமெண்ட்ஸ்:இங்கு கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. தயவு செய்து தகாத வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.


Security code
Refresh

Follow us

Follow us