ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணி. தெற்கு டெல்லியில் இருக்கும் முன்ரிகா என்கிற இடத்தில் சினிமா பார்த்துவிட்டு வந்த ஒரு 20 வயதுப் பெண்ணும் அவளுடைய காதலனும் த்வாரகா என்கிற இடத்திற்குச் செல்ல தனியார் பேருந்து ஒன்றில் ஏறியிருந்திருக்கிறார்கள்.
பஸ்ஸில் ஒரு ஐந்தாறு ஆண்கள் குரூப்பாக இருந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை இரவு ஆதலால் பஸ்ஸில் வேறு யாரும் இல்லை.
பஸ் கிளம்பி செல்ல ஆரம்பித்தவுடன் பஸ்ஸில் இருந்த அந்த ஆண்களும், பஸ்ஸின் கண்டக்டரும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக டிரைவரும் வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டியபடியே இருந்திருக்கிறான்.
தனது காதலியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபர்களை காதலன் தட்டிக் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபர்கள் எல்லாம் சேர்ந்து அவளின் காதலனை அடித்து நையப்புடைத்து ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசியிருக்கின்றனர்.
பின்னர் அந்த ஆறு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கதறக் கதற வன்புணர்ச்சி செய்திருக்கின்றனர். சுமார் 45 நிமிடங்கள் இவ்வாறு வன்புணர்ச்சி செய்துவிட்டு அவளையும் ரோட்டோரம் தூக்கி வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர் அந்த மிருகங்கள்.
இவ்வளவும் நடந்தது ஒரு சுங்கச் சாலையில்(Toll Road)..பின்பு நள்ளிரவில் சுமார் 12.15 மணிக்கு அந்தச் சாலையில் ரோந்து வந்த சுங்கச் சாலை ஊழியர்கள் ரோட்டோரம் வீசப்பட்டு கிடந்த அந்தப் பெண்ணையும் அவள் காதலனையும் கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் எமர்ஜென்ஸி வார்டில் உயிருக்குப் போராடிக் கொணடிருக்கிறார். அவளது அடிவயிறும், குடலும் ஏதோ ஒரு வலுவான பொருளால் பலமாகத் தாக்கப்பட்டு செயலிழந்து போயுள்ளன.
டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் இப்போது தான் சொரணை வந்தவர் போல, அதில் சம்பந்தப்பட்ட நால்வர் என்று சந்தேகப்படும் நால்வரை கைது செய்துள்ளோம். பஸ் சுங்கச் சாவடியில்(Toll Plaza) நின்று சென்ற போது கிடைத்த வீடியோவை வைத்து அவர்களை பிடித்து விடுவோம், பஸ் லைசன்சை உடனே கேன்ஸல் செய்துவிட்டோம் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நமது பண்பாடு, கலாச்சாரம் என்று சிலர் பேசும் போது "போடா வெண்ணை... கலாச்சாரமாவது ஒண்ணாவது" என்று பேசுபவர்களே, இதற்கு அவர்களை தூக்கில் போடு, இவர்களை குஞ்சை வெட்டு என்று வீராவேசமாக பேசுவதற்கு முன் ஒரு கணம் யோசியுங்கள்.
காமம் வெறித்தனமாக மாறும் போது என்ன கடுமையான தண்டனையும் கண்முன்னே தெரிவதில்லை. எப்படி, கொலை செய்தால் நமக்கும் தூக்கு கிடைக்கக் கூடும் என்று தெரிந்தும் இன்னும் கொலைகள் நடக்கின்றனவோ அது போல காமம் மனதை தடுமாறச் செய்யும் ஒரு கட்டுப்படுத்த இயலாத உணர்வு. அதை சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தி வளர்க்க வேண்டும்.
அதை கட்டுப்படுத்தவே கலாச்சாரம், பண்பாடு போன்ற விஷயங்களும், காமத்தை கடை பரப்பாத சமூகமும் நமது இந்தியாவில் இருந்தன (கூடவே நிறைய முட்டாள்தனங்களும், கட்டுப் பெட்டி தனங்களும் இருந்தன. அந்தக் கதை வேறு.)
இந்த நிகழ்வின் கொடூரம் இந்தக் குற்றத்திற்கு டிரைவரும், கண்டக்டரும் உடந்தையாக இருந்திருப்பது. அத்துடன் சினிமாவில் வரும் வில்லன்களின் செயலை அப்படியே வெளிப்படுத்தும் விதமாக அந்த மிருகங்கள் நடந்திருப்பது.
இவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது முக்கியம். அதே போல சமூகத் தளத்தில் பொறுப்பு உள்ள பதவிகளான நீதிமன்றம், காவல் துறை, ராணுவம், போக்குவரத்து மற்றும் பொதுத் துறை ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முன் ஒரு உறுதி மொழியும், இவர்கள் தனது சமூகப் பொறுப்பை மறுத்து மோசடி, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போது சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைக் காட்டிலும் கடுமையான தண்டனை வழங்கப்படுமென்றும் இருக்க வேண்டும்.
சரிதான். அப்படின்னா.. மன்னுளி மோகன் சிங், சேமியா காந்தி, ப.பிதம்பரம், ஆ.பாசா, கினிமொழி என்று பெரும் பாவங்கள் செய்த கடும் தண்டனை வழங்கப்படவேண்டியவர்கள் பட்டியல்கள் நீளுமே என்கிறீர்களா ?
போன மாதம் தான் இப்படி இரண்டு பாலியல் வன்முறைகள் டெல்லியில் நடந்தன. அதற்காக மற்ற மாநிலங்களெல்லாம் ரொம்ப ஒழுங்கு என்று அர்த்தமில்லை. டெல்லி ஏன் கூர்ந்து பார்க்கப்படுகிறது என்றால் அது இந்தியாவின் தலை நகரம் என்பதால்.
டிசம்பர் 22ம் தேதி உலகம் அழிந்து விடும் என்று புரளி கிளப்புகிறார்கள். எனக்கென்னவோ நெசமாவே உலகம் அழிஞ்சா சரின்னு தோனுது.
| < Prev | Next > |
|---|
Related news items:
Newer news items:
- கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் ! - Friday, 17 May 2013
- கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தும் தீரலை.. கூகுள் Vs ஸ்வீடன்காரன் பிரச்சனை.. - Tuesday, 30 April 2013
- புலிகளை அழிக்க உதவிய மும்மூர்த்திகள் சீனா-இந்தியா-அமெரிக்கா : விக்கிலீக்ஸ் - Thursday, 11 April 2013
- இவுங்கெல்லாம் தமிழ்நாட்டு காலேஜ் ஸ்டூடண்ட்ஸா? – எப்புடிப்பா? - Tuesday, 19 March 2013
- ஹியூகோ சாவேஸ் - ஒரு மக்கள் தலைவனின் மரணம் - Thursday, 07 March 2013
Older news items:
- உயிரோடு விளையாடிய எப்எம் ரேடியோ கலாய்ப்பு - Friday, 14 December 2012
- வருமானவரி..ஒரு 'பகீர்' புள்ளிவிவரம் - Tuesday, 04 December 2012
- அஜ்மல் கசாப்புக்கு திடீர்த் தூக்கு - Thursday, 22 November 2012
- பேஸ்புக்கில்(facebook) ‘லைக்’ செய்ததால் 15 நாள் சிறை - Tuesday, 20 November 2012
- சச்சினுக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது - Friday, 09 November 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.