கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் ஐதாராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஐ.பி.எல் அணியின் உரிமையை வாங்கி சன் ரைசர்ஸ் என்கிற புதுப் பெயருடன் களமிறக்க உள்ளது.
இதற்கான பெயர் மற்றும் சின்னம் வெளியீட்டு விழா நேற்று ஐதாராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு அணியின் வீரர்கள் பட்டியலை
வெளியிட்டார் அதன் ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்.
அணியின் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி அணியின் பயிற்சியாளராகவும், வி.வி.எஸ்.லஷ்மண் இன்னொரு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணிக்காக விளையாடப் போகும் 18 வீரர்கள் பட்டியலை அவர் இன்று வெளியிட்டார். அவ்வீரர்களின் பட்டியல் இது:கேமரான் ஒயிட், டேஸ் ஸ்டெயின், ஜீன் பால் டுமினி, ஜூவன் தெரான், க்றிஸ் லின், இஷாந்த் சர்மா, அபிஷேக் ஜூன்ஜூன் வாலா, ஆகாஷ் பண்டாரி, அமித் மிஷ்ரா, ஆனந்த் ராஜன், அங்கித் சர்மா, பரத் சிப்லி, ஷிகார் தவான், ரவி தேஜா, பார்திவ் பட்டேல், வீர ப்ரதாப் சிங், பிப்லப் சமாந்த்ரே, அஷரத் ரெட்ட, ஆசிஷ் ரெட்டி.
கலாநிதி மாறன் இந்த டீமை 5 வருடங்களுக்கு 425 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார். எல்லாம் எதற்கு ? என்னைப் போல உங்களைப் போல கிரிக்கெட் ரசிகர்களின் வீட்டு டி.விக்களில் நாள் தோறும் கிரிக்கெட் பார்த்து நாமெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்து சந்தோஷமாகவே சாகவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணமே தவிர இதன் மூலம் சுமார் 2000 கோடி ரூபாயாவது சம்பாதித்து விடலாம் என்கிற 'பிஸ்னெஸ' நோக்கமெல்லாம் ஒன்றுமில்லை.
இந்த கிரிக்கெட் டீமுக்கு நம் மறத் தமிழர் கலாநிதி மாறன் தேர்ந்தெடுத்திருக்கும் கேப்டன் யார் தெரியுமா? நம் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த சிங்களர்களின் கிரிக்கெட் டீமின் கேப்டன் பிரபல வீரர் சங்கக்கரா.
ஏய். சும்மா இருப்பா? அது வேற இது வேற என்று ஆட்சேபிக்கும் சிலரின் குரல் கேட்கிறது.
கேட்டால் சொல்வார்கள் அது கொலை. இது கலை. அதையும் இதையும் கலக்கப்படாது. அரசியலையும், விளையாட்டையும் கலக்கக் கூடாது.
சரிதாங்க. விளையாட்டுக்கு சுட்டுச் சுட்டு கொன்னாக்கூடா கேக்கக்கூடாது. மாங்கா மடையங்க மாதிரி டி.வியையே ஆன்னு வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்க வேண்டியது தான்.
| < Prev | Next > |
|---|
Related news items:
Newer news items:
- இனப் படுகொலையின் 4வது ஆண்டு நினைவு - மெரினா,மே19,ஞாயிறு. - Monday, 13 May 2013
- விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளே தான் - அமெரிக்க தூதர் - Sunday, 28 April 2013
- இந்திராகாந்தி குடும்பத்தை உளவறிந்த அமெரிக்கா - விக்கிலீக்ஸ் - Wednesday, 10 April 2013
- ஐ.பி.எல்லே இங்கு தேவையில்லை – ஜெ. அதிரடி - Wednesday, 27 March 2013
- இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவின் போலித் தீர்மானத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் - Thursday, 14 March 2013
Older news items:
- பான்-கி-மூன், விஜய் நம்பியார் - இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகள்!! - Monday, 17 December 2012
- உயிரை கொடுத்தாவது இயற்கை வளத்தை காப்போம் - கூடங்குளம் உதயகுமார் - Wednesday, 12 December 2012
- ஜெயலலிதா - ஷட்டர் காவிரி பேச்சுவார்த்தை தோல்வி - Friday, 30 November 2012
- தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர் - Thursday, 22 November 2012
- மின்சாரக் கனவு - Sunday, 18 November 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.