சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இனி விளையாடப் போவதில்லை என்று திடீரென்று அறிவித்துள்ளார். அவருடைய இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதத்தோடு 40 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று
அறிவித்ததோடு பிசிசிஐ டி.விக்கு ஒரு அறிக்கையும் கொடுத்துள்ளார். அதில் "உலகக் கோப்பையை வெல்லும் நமது அணியில் பங்கு வகிக்க வேண்டும் என்கிற எனது கனவு நிறைவேறியுள்ளது. 2015க்கான உலகக் கோப்பைக்கு நாம் இப்போதே தயாராக வேண்டியுள்ளது. எனது நலம் விரும்பிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சச்சின் ரிட்டையர்ட் ஆகணும். ஆகக்கூடாது. பார்ம் அவுட். வயசாயிடுச்சி.. நாக்கு தடிச்சிருக்கு... கை விரல் வீங்கியிருக்கு.. என்கிற ரேஞ்சில் ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி அவரை பந்தாடி வந்தார்கள். இவ்வளவு நாளும் அமைதியாகவே அவற்றை எதிர்கொண்டு வந்தார் சச்சின். நாக்பூரில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தவுடன் டெண்டுல்கர் சில நாட்கள் எங்கோ சென்றுவிட்டார். அவர் மனைவியைத் தவிர அவருடன் வேறு யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இப்போது சச்சின் திடீரென்று ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது ஓய்வு பற்றி அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெண்டுல்கரின் இந்த அறிக்கை அவருக்கு 2015 வரை கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற ஆவல் இருப்பதையும் ஆனால் சரியாக பார்மில் இல்லாததால் வெளியே போ வெளியே போ என்று எல்லோரும் துரத்தியதாலேயே அவர் இந்த முடிவு எடுக்க நேர்ந்திருப்பதையும் காட்டுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இனியும் அவர் விளையாடுவார் என்றாலும் எதிர் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மேட்ச்சோடு அவர் ரிட்டையர் ஆகக் கூடும்.
நம்முடைய விருப்பமெல்லாம், டெண்டுல்கர் பார்மில் இல்லாத போது தொடர்ந்து விளையாடவேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு ஆறு மாதம் ரெஸ்ட் எடுத்து விட்டு பார்ம் வரும் வரை ரஞ்சி கோப்பை அது இது என்று விளையாடிவிட்டு திரும்பவும் பார்ம் வந்ததும் உள்ளே வந்து இறங்கலாம். அவரைத் தடுக்க யாருமில்லை.
39 வயதிலேயே இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் ரிட்டைடயர்ட் ஆகி விடுகிறார்கள். அவர்கள் ரிட்டையர்ட் ஆகாவிட்டாலும் சுற்றி இருக்கிற கார்ப்பரேட் கம்பெனிகாரர்கள் இளரத்தம் வேண்டும் என்று இவர்களை துரத்தியடித்து விடுகிறார்கள். கிரிக்கெட்டை கிரிக்கெட்டுக்காக ஆடிய காலம் போய், ரசிகர்கள் ரசிக்கிறவரைதான் கூத்து மேடை என்பது போல் சிக்ஸர், போர் என்று சகட்டு மேனிக்கு அடித்துக் கொண்டேயிருந்தால் தான் அணியில் இடம் என்றெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் 1940-50 களிலெல்லாம் 47 வயது வரையிலும் கூட கிரிக்கெட் விளையாடி ரிட்டையர்ட் ஆகியிருக்கிறார்கள். பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில் 50 வயதுக்கு மேலும் இருந்து விளையாடி பின் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.
டெண்டுல்கர் மற்ற யாருடைய நிர்ப்பந்தத்திற்காகவும் பணிந்து போய் ரிட்டையர் என்று அறிவித்திருக்க வேண்டியதில்லை. அவர் போன்ற சகாப்தங்கள் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் விளையாட்டிற்கே பெருமை சேர்த்தவர்கள். அவரால் கிரிக்கெட் மேலும் புகழடைந்திருக்கிறது.
அவரை அவர் மனம் போல் விளையாட விடுங்கள். அவர் பார்மில் இல்லையென்றால் அவரை டீமில் எடுக்காதீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவரை ரிட்டையர்ட் ஆகச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவருக்கும் அவரின் உயிரில் கலந்திருக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையிலான முடிவு. தயவு செய்து இந்த முடிவை நீங்கள் அவர் மேல் திணிக்காதீர்கள்.
கிரிக்கெட்டுக்கு இனி ஒரு லிட்டில் மாஸ்டர் கிடைக்கவே போவதில்லை.
Related news items:
Newer news items:
- ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? - Tuesday, 21 May 2013
- வீழ்வோம் என்று நினைத்தாயோ - சீமான். - Thursday, 16 May 2013
- அமெரிக்காவில் லீக்காகிக் கொண்டிருக்கும் பழைய அணுக்கிடங்கு - Monday, 15 April 2013
- நடிகர்களு(ம்) நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு உண்ணா-பேசா விரதம் - Thursday, 04 April 2013
- 'மூன்றாம் உலகப் போரி'ல் தெரியும் வைரமுத்துவின் ஈரமனது - Monday, 11 March 2013
Older news items:
- இம்பேஸ்டோ - சென்னையில் தற்காலத்திய ஓவியக் கண்காட்சி - Wednesday, 19 December 2012
- நிலவில் மோதப் போகும் நாசாவின் க்ரெய்ல் விண்கலங்கள் - Saturday, 15 December 2012
- சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க நடந்த நாடகம் வெற்றி - Thursday, 06 December 2012
- பிரபாகரன் சொல்லாத மாவீரர் தின அறிக்கை - Thursday, 29 November 2012
- ஆ.ராசா நிரபராதியாம்.. நிருபிச்சிட்டார் நம்ம கலைஞர்.. - Wednesday, 21 November 2012




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.