நாளைய இயக்குநர் சீசன் 3ல் போட்டியிட்ட படம். பரிசு ஏதும் வாங்கியதா தெரியவில்லை.
க்ராபிக்ஸ் எதுவும் இல்லாமல், கதைக்காக மெனக்கெடாமல் சிம்ப்பிளாக ஒரு ஐடியா வைத்திருக்கிறார்கள். படத்தில் அதுவே
சிறப்பாக இருக்கிறது.
ஒரு கிப்ட் ஷாப் கடைக்கு பரிசுப் பொருள் வாங்கச் செல்லும் ஒரு யுவன் மற்றும் யுவதி பற்றிய கதை. அவ்வளவே தான் கதை. இதுக்கு
மேல் எது சொன்னாலும் 8 நிமிஷக் கதையை நீங்கள் பார்க்கும் சுவராசியம் குறைந்துவிடும். இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி இதில் வசனங்களே இல்லை. பேசும்பட ஸ்டைலில் வசனங்கள் இருக்க வாய்ப்பு இருந்தும் தவிர்த்திருக்கிறார்கள்.
படத்தில் இரண்டே இரண்டு மெயின் கேரக்டர்கள். கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதில் இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும்,
இக்குறும்படத்தில் ஆழமான நடிப்பைக் கோருகிற காட்சிகள் இல்லாததால் இப்படத்தை மட்டும் இவருடைய இயக்கத்துக்கு
அளவுகோலாகக் கொண்டுவிட முடியாது.
மற்றபடி கதை, இயக்கத்தில் இயக்குனர் சொன்னவிதத்தில் தேறிவிடுகிறார் தான். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, மற்றும் முக்கிய
கதாபாத்திரங்கள் இருவர் என எல்லோரும் தமது பங்கைச் சரிவரச் செய்திருக்கின்றனர்.
பாருங்கள். வித்தியாசமான கற்பனையைக் கொண்ட இந்த இன்பாக்ஸை.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=75wNgCo-BQM
தயாரிப்பு - சிவபாலன், அனுராஜ். ஒளிப்பதிவு - ரவிவர்மா இசை - பாலமுரளி பாலு எடிட்டிங், சவுண்ட் டிசைன் -அபினவ் சுந்தர்
நாயக், சவுண்ட் எபக்ட்ஸ் - நாராயணன். போஸ்ட் ப்ரொடக்ஷன் - நாயக் சினிமா. உதவி இயக்குநர்கள் -மரியா நிர்மல், வெங்கட்
ராஜேந்திரன். இயக்கம் - மடோன் அஷ்வின்.




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.