Wednesday, May 22nd

Last update12:29:54 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: செய்திகள் செய்திகள் 2 'இந்த வருஷம் எனக்கு ரெஸ்ட் விடுங்க பாஸ்’- இயக்குனர் விஜய் அப்பீல்

'இந்த வருஷம் எனக்கு ரெஸ்ட் விடுங்க பாஸ்’- இயக்குனர் விஜய் அப்பீல்

ama

நயன் தாரா, அமலா பால்களுக்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் இயக்குனர் விஜய் தான். அதிலும் ‘தாண்டவம்’ படச்செய்திகள் மட்டுமே அவரது வாழ்க்கையில் கோரதாண்டவத்தை ஆடிவிட்டுச்சென்றது

என்றால் மிகையில்லை.
‘’என்னைப்பத்தி எக்கச்சக்கமா எழுதி சொந்தபந்தங்களா மாறிட்டீங்க. அந்த உரிமையில கேக்குறேன். 2013-ல என்னைப்பற்றிய வதந்தி, கிசுகிசு, பிட்டு மற்றும் அட்டுச் செய்திகளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடுங்க பாஸ்’ என்ற கோரிக்கையுடன் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தனது லெட்டர்பேடில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் விஜய்.
தன்னைப்பற்றியும், தனது பெயரிப்படாத நடிகர் விஜய் படம் பற்றியும் வரும் சில செய்திகள் தனக்கு மிகுந்த மனவேதனையையும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு பணவேதனையையும் தரக்கூடும் என்பதால், என்ன எழுதுவதாக இருந்தாலும் தன்னைத்தொடர்பு கொண்டு தீர விசாரித்த பிறகே எழுதும்படி அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கிறார் இயக்குனர் விஜய்.
சரிதான் பாஸ், ஆனா உங்க வழியில ஒரு பத்து இயக்குனர்கள் அப்பீல் பண்ணுனா, நம்ம சினிமா நிருபர்கள் நிர்கதியா நிக்கணுமே பாஸ்.  அப்புறம் அவிங்க புவாவுக்கு என்ன பண்ணுவாய்ங்க?

பி.கு: இந்த ஸ்டில்லைப்போட்டதுல எதுவும் உள்நோக்கம் இல்லை பாஸ். முதல்காரணம் உங்களைப்பத்தி கிசுகிசு எதுவும் வரலைன்னா அந்தப்பொண்ணு எவ்வளவு சந்தோஷப்படும்னு யோசிச்சது. ரெண்டாவது, அவசரத்துக்கு உங்க ஸ்டில் எதுவும் கிடைக்கலை அதான்.

Share

Add comment

வாசகர் கமெண்ட்ஸ்:இங்கு கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. தயவு செய்து தகாத வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.


Security code
Refresh