Monday, May 20th

Last update09:36:14 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: செய்திகள் செய்திகள் 3 ' உத்தரவின்றி உள்ளே வா’ - விஜயலட்சுமி கூப்பிடுறாங்க

' உத்தரவின்றி உள்ளே வா’ - விஜயலட்சுமி கூப்பிடுறாங்க

viji-1

’சென்னை-28’ க்கு அப்புறம் தன்னை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத கோபமோ என்னவோ, சி.எஸ். அமுதனின் 2 வது படமான ‘ரெண்டாவது படத்தில் மொத்த தமிழக இளைஞர்களுக்கும் கிறுக்குப் பிடிக்கும் அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறாராம் அகத்தியனின் புதல்வி

விசயலட்சுமி.
1992-ல் வெளிவந்த ‘பேசிக் இன்ஸ்டிங்ட்’ படத்தில் கவர்ச்சி நடிகை ஷெரன் ஸ்டோன்,  ஒரு காட்சியில் உள்ளாடை அணியாமல் நடித்து உலகை உலுக்கியது, நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த துணி’ச்சலான ஷெரன் ஸ்டோனை மனதில் வைத்துதான் ‘ரெண்டாம் படம்’ கேரக்டரையே பண்ணிவருகிறாராம் விசயலட்சுமி.
‘ரெண்டாவது படம்’, இதுவரை தமிழ்ப்பட நாயகிகள் யாரும் செய்யத்துணியாத ’சொல்பேச்சு கேட்காத சுந்தரி’ கேரக்டர். இப்படி ஒரு ரவுசுத்தனமான பெண்ணை சி.எஸ்.அமுதனைத்தவிர வேறு யாரும் உருவாக்க முடியுமா என்பது தெரியவில்லை. டப்பிங் பேசும்போது, திரையில் பார்த்த, என்னைப்பார்த்து நானே பயந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்’ என்கிற விசயலட்சுமி, 2013-ல் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற எவ்வளவு கிளாமராக வேண்டுமானாலும் நடிக்கத்தயாராக இருக்கிறாராம்.
கவர்ச்சிங்குறது காட்டுறவங்க மற்றும் பாக்குறவங்கன்னு ரெண்டு தரப்பு சம்பந்தப்பட்ட சமாச்சாரம். ஆனா நீங்க என்னமோ, கிரவுண்டுல எதிர்தரப்புல ஆள் இல்லாமலே பால் அடிச்சி விளையாடுறீங்களோன்னு கொஞ்சம் டவுட்டா இருக்குது.

Share

Add comment

வாசகர் கமெண்ட்ஸ்:இங்கு கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. தயவு செய்து தகாத வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.


Security code
Refresh