ஜீவா, விக்ரம் இணைந்து நடிக்கும் ‘டேவிட்’ இந்தி மற்றும் தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று ராணி சீதை ஹாலில் நடந்தது. மணிரத்னத்தின் உதவியாளரும், ஏற்கனவே இந்தியில் ‘சைத்தான்’ என்ற படத்தை இயக்கியவருமான பிஜாய் நம்பியாரின் இரண்டாவது படமான ‘டேவிட்’ க்கு, நம்ம கொலவெறி பாய்
அனிருத் உட்பட மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள்.
அப்ப ஆளுக்கொரு பாட்டுன்னு வச்சாலே படத்துல மொத்தம் ஆறு பாட்டு வருமே? என்று நீங்கள் ஆச்சரியப்படுவதாய் இருந்தால், அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்ளுங்கள். தமிழ் ‘டேவிட்’டில் ஒன்பது பாடல்களும்,இந்தியில் 15 பாடல்களும் இடம்பெறுகின்றன.
நடிகர் ஜீவா தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மட்டும் வந்திருக்க, தனது மார்க்கெட் இறங்கி விட்டதோ என்ற சந்தேகத்தாலோ என்னவோ விக்ரம் ஏகப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஜீவா தனக்கு படத்தில் சண்டைக்காட்சி ஒன்றில் டைரக்டரும். ஸ்டண்ட் மாஸ்டரும் பெண்டு கழட்டியதைப் பற்றி விலாவாரியாக விளக்க, விக்ரமுக்கோ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவரான இஷா ஷெர்வானியை சிலாகிக்கவே நேரம் போதவில்லை.
‘அந்தப்பொண்ணு ஜிம்முல எக்ஸர்சைஸ் பண்ணுற ஸ்டைலைப் பாத்து மிரண்டு போயிருக்கேன். [லேடீஸ் ஜிம்முல உங்களுக்கு என்னவேலை டேவிட்?] காலைத்தூக்கி சர்வசாதாரணமா கழுத்துக்கு மேல போடுது. இன்னொரு கால் ஆகாயத்தை நோக்கி செங்குத்தா போகுது. நானே பார்த்து மிரண்டு போயிட்டேன்.இன்னைக்கு இந்தியாவுல பெஸ்ட் ஹீரோயின் யாருன்னு கேட்டா நான் இஷாவைத்தான் சொல்வேன்’’ என்று அநியாயத்துக்கு ஐஸ் வைத்தார் விக்ரம்.
மேற்படி இஷா ஷெர்வானியைக் கரெக்ட் பண்ணும் எண்ணத்திலோ என்னவோ ஒருவகையான ப்ரவுன் கலர் ஷெர்வானி ஆடையில்தான் வந்திருந்தார் அண்ணன் அனிருத். படத்துக்கு அவர் இசையமைத்திருந்தது ‘நினைவே நினைவே’ என்னும் காதல் தோல்விப்பாடலுக்கு. அண்ணி ஆண்ட்ரியாவின் ஞாபக சுதியோடு இசையமைத்திருப்பார் போல. பாடலில் அப்படி ஒரு காதல்தோல்வி ரசம் பொங்கி வழிந்தது.
Related news items:
Newer news items:
- சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம். - Monday, 20 May 2013
- 'நான்தான்டா' ராம்கோபால் வர்மா. - Friday, 17 May 2013
- 4-பேர்.3-காரணங்கள்.2-பெண்கள்.1-நாள். - Thursday, 09 May 2013
- போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! - ராமகிருஷ்ணன் - Thursday, 02 May 2013
- மீண்டும் களமிறங்கும் கோவைத் தம்பி - Monday, 29 April 2013
Older news items:
- ' உத்தரவின்றி உள்ளே வா’ - விஜயலட்சுமி கூப்பிடுறாங்க - Wednesday, 02 January 2013
- ’ டி.டி.ஹெச்சை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்’- எச்சரிக்கிறார் கமல் - Monday, 31 December 2012
- ’என் சொல்பேச்சைத் தட்டினார் ரஜினி’ –கமல் திடீர் தும்மல் - Saturday, 29 December 2012
- 'விக்றோம், விக்றோம் விஸ்வரூபத்தை டி.டி.ஹெச்’ல விக்றோம்’- இறுதி முடிவை எடுத்தார் கமல் - Friday, 28 December 2012
- 'என்னமோ நடக்குது'...ஷூட்டிங் நடக்குது. - Thursday, 27 December 2012



கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.