சினிமா இயக்குனராவதும்,.சினிமா குறித்த தேடல்களும்,சினிமா பற்றிய அறிவும் அதிகமாகி வரும் காலம் இது.
பல கல்லூரிகளில் சினிமா சார்ந்த விஷிவல் கம்யூனிகேசன் துறையில் மாணவர்கள் குவிந்தும் வருகிறார்கள்..
ஒரு சினிமாவை சார்ந்து எத்தனை துறைகள் இருக்கிறது தெரியுமா..? கிட்டத்தட்ட 24 துறைகள்…[ 24 grafts ] திரைப்பட தயாரிப்பாளர்களை தொடர்ந்து..
- திரைப்பட இயக்குனர்கள்
- திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்
- திரைப்பட தொகுப்பாளர்கள்
- திரைப்பட எழுத்தாளர்கள்
- திரைப்பட கலை இயக்குனர்கள்
- திரைப்பட இசையமைப்பாளர்கள்
- திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள்
- திரைப்பட ஸ்டில் கேமராமேன்கள்
- திரைப்பட ஒப்பனை கலைஞர்கள்
- திரைப்பட தையற்கலைஞர்கள்
- திரைப்பட நடனக் கலைஞர்கள்
- திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர்கள்
- திரைப்பட ஒலியாளர்கள்
- திரைப்பட பிண்ணனிக்குரல் கலைஞர்கள்
- திரைப்பட செட்டிங்ஸ் ஒர்க்கர்ஸ்
- திரைப்பட லைட்ஸ் மேன்ஸ் ஒர்க்கர்ஸ்
- திரைப்பட யூனிட் டெக்னிசியன்ஸ்
- திரைப்பட உதவி நிர்வாக ஊழியர்கள்
- திரைப்பட சக நடிகர்கள்
- திரைப்பட துணை நடிகர்கள்
- திரைப்பட வாகன ஓட்டுனர்கள்
- திரைப்பட நளபாக ஊழியர்கள்
- திரைப்பட பெண் ஊழியர்கள்
- திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்
என்ன மலைப்பாக இருக்கிறதா…?
ஏன் ஒரு சினிமா முழுக்க முழுக்க இயக்குனரை சார்ந்தே இருக்கிறது? எதற்காக ஒரு இயக்குனரை CAPTAIN OF THE SHIP என அழைக்கப்படுகிறார்..? மேலே கூறிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரு சினிமாவை உருவாக்குவது ஒரு இயக்குனர் என்பதால் தான்..!
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படப்பிடிப்பு முடிந்த அன்று இரவே கிளம்பி அடுத்த படத்துக்கான பணிக்கு செல்ல இயலும்,.ஆனால் ஒரு இயக்குனர் ,ஒரு திரைப்படம்,கதை விவாதத்தில் ஆரம்பித்து , முதல் பிரதி எடுத்து தியேட்டர் சென்று அடையும் வரை அவரின் பணி தொடர்கிறது,.! ஏற்கனவே சினிமா உதவி இயக்குனர்களுக்காக நான் எழுதிய புத்தகமான ``நீங்களும் இயக்குனராகலாம்’’ நக்கீரன் வெளியீடாக,..மூன்றாம் பதிப்பை நோக்கி செல்லும் இந்த வேளையில்,..அதன் தொடர்ச்சியாக,. சினிமா,.போஸ்ட் புரொடக்ஷன் பணிகளான
- எடிட்டிங் டெக்னாலஜி, [EDITING TECHNOLOGY ]
- ரீ-ரிகார்டிங்க் [RE-RECORDING]
- சிறப்பு சப்தம் [ EFFECTS ]
- D.T.S. / 5.1 SOUND MIXING
- D.I. [ கலர் கரெக்ஷன் ]
- கிராபிக்ஸ் பணிகள்
- DIGITAL FILM CONVERSION
- நேரடி பிரிண்ட்
பணிகள் பற்றியும்,இன்றைய டிஜிட்டல் சினிமா மற்றும் சினிமா இன்று எப்படி தியேட்டருக்கு வந்து சேர்கிறது என்பது வரை விரிவாக ஒரு கட்டுரை தொடரைத் தரலாம்,.என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கிறேன்…! அடுத்த தொடரில் சந்திக்கலாம்……………………………………………….!

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.