Sunday, May 26th

Last update12:33:04 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 02 யுத்தநாயகன் மிஷ்கின்

யுத்தநாயகன் மிஷ்கின்

இரவிலும் கருப்பு கண்ணாடியோடு இருப்பவர் , தூங்கும் போதும் டாய்லெட்டிலும் கூட கண்ணாடியோடு இருப்பவர் என்றெல்லாம் கேலி செய்யப்படும் மிஷ்கின் ஃபிலிம் லாங்குவேஜ் எனப்படும் திரைமொழியில் மிருகபலம் கொண்டவராக மெருகேறிகொண்டே இருக்கிறார்..

 

சித்திரம் பேசுதடி முதற்கொண்டே, அவர் சில தருணங்களை காட்சிப் படுத்துகிற விதமும், நடிப்பைப் பெறுகிற விதமும் , இசை சேர்க்கும் விதமும் இவரால் உலக சினிமா என்று சொல்லப் படுகிற ஒன்றை தந்து விட முடியும் என்ற நம்பிக்கையை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது.

யுத்தம் செய் இந்த எல்லா அடையாளங்களும் கொண்ட சினிமாவாக இருந்தது.

இந்த படத்தின் ஒரே குறைபாடு சேரன் மட்டுமே.

ஜேகே என்ற பெயருக்கும், புலனாய்வு அதிகாரி என்ற கதாபாத்திரத்திற்கும் எள் முனையளவும் தகுதியற்றவராக இருந்தார்.

ஒரு காட்சியில் சேரன் டீ வாங்கி வருவார். அதுதான் அவருக்கு பொருத்தமாக இருந்தது.

தான் நடிகராகப் பணியாற்றுகிற இயக்குனர்களுக்கெல்லாம் கடும் தோல்வியை கைமாறாக் கொடுக்கிறவர் சேரன். சொல்ல மறந்த கதை, ஆடும் கூத்து, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை என்று அந்தப் பட்டியல் நீளும். அவரை வைத்துக் கொண்டே இப்படி ஒரு சிறந்த படத்தைக் கொடுத்தது மிஷ்கினின் ஆற்றலின் மேல் மேலும் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

சித்திரம் பேசுதடி சுத்த சுயம்புவான கதை.அஞ்சாதே கொஞ்சம் அங்கும் இங்குமாக சுரண்டி எடுத்த கதை. கிகிஜிரோவை ஆபாசமாகத் திருடி நந்தலாலா என்று திரைப்படம் எடுத்தார் மிஸ்கின். இனிமேல் இயக்குனர் மிஷ்கின் என்று சொல்ல முடியாது, திருடர் மிஷ்கின் என்று தான் சொல்ல வேண்டியிருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு மேலாக அவர் சொன்ன பொய் விளக்கங்கள் மிகுவும் ஆபாசமாக இருந்தது. யுத்தம் செய் சுயமாக யோசித்த கதைதான் என்று நினைக்கிறோம். ( யாரேனும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம்)

நல்ல விசயங்களில் இரண்டு விதமான நல்ல விஷயங்கள் இருக்கின்றன. தத்துவ செறிவுடன் கூடிய நல்ல விஷயங்கள். மொன்னையான நல்ல விஷயங்கள். மிஷ்கின் படத்தில் மொன்னையான நல்ல விஷயங்களே வெளிப்படுகிறது. இதற்கு காரணம் தத்துவப் பயிற்சி இல்லாதது . அவர் நிறைய புத்தகம் வாசிக்கிறவர் என்று அறியப்படுகிறார். ஒருவேளை முறையற்று, சிக்கிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கிறாரோ என்னவோ.

மிஷ்கின் சுய அறிவிலிருந்து உதிக்கும் கதைகளை தத்துவச் செறிவுடன் எடுக்கத் துவங்கினால் கிரிஸ்டோஃபர் நோலன், குவான்டின் டொரண்டினோ போன்ற இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக உயர்ந்து விட முடியும். அதற்கான திரைமொழி தமிழில் அவரிடம் மட்டுமே இருக்கிறது.

2011 ஆம் ஆண்டில் சினிமா என்னும் தேரை சன்னதிக்கு இழுத்துச் சென்றவர் மிஷ்கின் என்பதை hellotamilcinema.com பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறது.

Share