Tuesday, May 21st

Last update12:29:54 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 02 எங்கிருந்தோ வந்தார் தியாகராஜன் குமார ராஜா.

எங்கிருந்தோ வந்தார் தியாகராஜன் குமார ராஜா.

  • PDF
  • Prev
  • 1 of 3
  • Next

உலகசினிமாவை சில மொள்ளமாரிகள் கதை திருடுவதற்காகப் பார்ப்பார்கள். சில மேன்மையானவர்கள் தனது கலை ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பார்ப்பார்கள். தியாகராஜன் குமாரராஜா இதில் இரண்டாம் வகை, உலக சினிமாவின் பல அழகிய சலனங்களை தன் முதல் படத்திலேயே கொண்டு வந்து சேர்த்து அழகு படுத்தியிருந்தார் அந்த யாரிடமும் உதவி இயக்குனராகப் பணி செய்யாத ராஜா.

ஆரண்ய காண்டம் பார்த்த தினத்தின் பரவசம் இப்பொழுதும் நினைவில் இருக்கிறது.

கதை புதிது, காட்சி புதிது, சொல் புதிது, பொருள் புதிது என்பதாகத்தான் இருந்தது ஆரண்ய காண்டம்.

நமக்கு தெரிந்த நடிகர்கள்தான், நமக்கு தெரிந்த இசையமைப்பாளர்தான், நமக்குத் தெரிந்த ஒளிப்பதிவாளர் தான் ..எங்கே அந்த மாந்திரீகம் நிகழ்ந்தது என்று ஆச்சர்யாம் ஏற்படும் அளவிற்கான ஒரு மாற்றத்தை உருவாக்கித் தந்திருந்தார் நமக்குத் தெரியாத அந்த இயக்குனர்.

இதே பரவசம் ஏற்பட்ட இன்னொரு தினத்தை மனதில் தேடிப் பார்த்தால் நாயகன் பார்த்த தினம் தான் நினைவிற்கு வருகிறது.

ஓரம்போ படம் பார்த்த நாளிலேயே ஒரு வியப்பு இருந்தது. அன்று அதில் வசனம் குமாரராஜா என்றிருந்தது பெரிதாய் நினைவில் இல்லை. ஆரண்யகாண்டமும் பார்த்த பின்புதான் அந்தப் படம் அன்று ஏன் வியப்பாய் இருந்தது என்பதற்கான காரணம் புரிந்தது. மிக நுட்பமாய் தயாராகி வந்திருக்கிறார் குமார ராஜா.

இந்தப் படம் ஓடாமல் போனதற்கு பல காரணம். மிக முக்கியமான காரணம் ஜாக்கிஷெராஃப் போன்ற ஒரு இந்தி நடிகர் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருந்தது. பலர் இது ஏதோ டப்பிங் படம் என்று முடிவு செய்து பார்க்காமலிருந்து விட்டார்கள்.

விக்ரம் மாதிரி ஒரு நடிகர் ஏற்று நடித்திருக்க வேண்டிய பாத்திரம்தான் அது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ஒரு நல்ல கதைக்காக இறங்கி வந்து நடிக்கிற பெருந்தன்மை தமிழ் திரையுலகில் மரணித்து பல வருடங்கள் ஆகிறது, என்னதான் செய்வார் குமார ராஜா,

இந்தப் படத்தை ஸ்கிரிப்ட் அளவிலேயே முடிவு செய்ய முடிந்த சரணும் எஸ். பி. பியும் மரியாதைக்குரியவர்கள்.

2011 ம் ஆண்டின் சிறந்த இயக்குனர் என்று தியாகராஜன் குமார ராஜாவை கம்பீரமாக அறிவிக்கலாம்.

தியாகராஜன் குமார ராஜா 2011 ம் ஆண்டின் தமிழ் சினிமா என்னும் தேரை சன்னதிக்கு இழுத்துச் சென்றவர் என்பதை hellotamilcinema.com பெருமையுடன் பதிவு செய்கிறது..

( எங்கள் ஆசிரியர் குழுவின் இரா.பிச்சைராஜா படம் வெளியான சமயத்தில் ஆரண்யகாண்டம் திரைப்படம் குறித்து எழுதிய விரிவான கட்டுரையை ஆரண்ய காண்டம்: உலக சினிமாவை நோக்கி..காணலாம்.)

Share