Friday, May 24th

Last update12:53:29 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 2012 – ஒரு திரைப்பார்வை 01 ராதா மோகனராகத்தில் ஒரு ‘பயணம்’

ராதா மோகனராகத்தில் ஒரு ‘பயணம்’

  • PDF

வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் கிடைக்காத சாகித்ய அகாடமி ஒரே நாவலில் சு.வெங்கடேசனுக்கு கிடைத்த மாதிரி சினிமாவில் சிலர், சுமாரான ஒரே படத்தில் உயரக்கொண்டு போகப்பட்டுவிடுகிறார்கள். [உ.ம் ‘சுப்ரமணியபுரம்’ சசிக்குமார்.

படைக்கிற அத்தனையும் தரமாய் படைக்கிற வண்ணநிலவ,தாசன்கள் ஏனோ அவ்வளவாய் கண்டுகொள்ளப்படுவதில்லை. தமிழ் சினிமாவில் அந்த வண்ணம் நமக்குத்தோன்றுபவர் அழகிய தியே’ முதல் கடந்த 2011 வெளிவந்த ‘பயணம்’ வரை அழகிய பயணம் செய்திருக்கும் இயக்குனர் ராதாமோகன். ‘பயணத்தின் வியாபார ரீதியான விளைவுகள் என்ன என்பது தெரியவில்லை எனினும்,தமிழ் சினிமாவை மேலும் ஒரு படி உயர்த்திய பெருமை கண்டிப்பாக அந்தப்படத்துக்கு உண்டு.

விமானக்கடத்தல் என்று ஒரு த்ரில்லரை கையில் எடுத்துக்கொண்டு,அதில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சாமர்த்தியம் ராதாமோகனுக்கு மட்டுமே சாத்தியம். அதிலும் ஒரு டம்மி ஹீரோவைத்துக்கொண்டு அவர் அடித்த லூட்டி வெரி நாட்டி.

வெளி நாட்டு டி.வி.டி களில் கதைகளைச் சுட்டுவிட்டு வெக்கமே இல்லாமல் அதைக்கக்கத்தில் வைத்துக்கொண்டு’ அந்த ஷாட்டை இந்த ஆங்கிள்ல வச்சி எடுத்தேன். ஒரு ஃபைட்டை 35 நாள் எடுத்தேன்’ என்று தன் சொந்தப்பெருமை பீத்திக்கொள்ளும் கோடம்பாக்க கோமாளிகள் மத்தியில் ராதாமோகன் தன் படைப்பைப் பற்றி மக்கள் பேசினால் போதும் என்று அமைதி காக்கிற மவுன குரு. எனவே ராதாமோகனின் ‘பயணம்’ தமிழ் சினிமா என்னும் தேரைசன்னதிக்கு இழுத்துச்சென்றது என்பதை hellotamilcinema.com பெருமையுடன் அறிவிக்கிறது.

 

Share