சில படங்களின் டிஸைன்களைப்பார்க்கிற போதே, இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று மனசுக்குள் மணி அடிக்கும்.’ ‘எங்கேயும் எப்போதும்’ பட விளம்பர டிஸைன்களைப் பார்த்தபோது, மணி என்ன சின்ன அலாரம் கூட அடிக்கவில்லை.
படத்தின் ஹீரோ ஜெய் வரிசையாக தோல்விப்படங்களைக்கொடுத்து, ரொம்ப சின்ன வயசிலேயே ரிடையர் ஆகும் ஸ்டேஜில் இருந்தார். இன்னொரு ஹீரோவோ புதுமுகம். ஆக படத்துக்கு இருந்த ஒரே கவர்ச்சி அது
ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பாய் இருந்ததுதான்.
தோராயமாக வருஷத்துக்கு 100 படங்கள் தயாராகும் தமிழ் சினிமாவில், தோராயமாக வருஷத்துக்கு 25 புது இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள்.இந்த 25 பேரில் 2பேர் தேறி வருவதே பெரும்பாடாய் இருப்பது காலகாலமாய் நாம் கண்கூடாய் கண்டுவரும் கண்ணீர்க் காட்சி.
சில உதவி இயக்குனர்கள் தாங்கள் வேலை செய்த இயக்குனரின் ஜெராக்ஸ் காட்சியாய் இருப்பார்கள். இன்னும் சில உதவி இயக்குனர்களோ தாங்கள் வேலை செய்த இயக்குனரின் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முதல் படத்திலேயே தனி முத்திரை பதிப்பார்கள்.’ எங்கேயும் எப்பொதும்’ சரவணன் இதில் இரண்டாவது ரகம்.
உலுக்கி எடுக்கும் ஒரு விபத்தைத்தொடர்ந்து, விரியும் இரு காதல் ஜோடிகளின் கதையை சரவணன் சொல்லமுற்பட்ட விதம் சொல் புதிது பொருள் புதிது மாதிரி தமிழ் சினிமாவுக்கு புதிது.
இந்தப்படம் தமிழ்சினிமாவுக்கு நேர்ந்த அழகிய விபத்து என்பதைத்தாண்டி வேறு எதுவும் சொல்லவேண்டியதில்லை.
இந்தப்படம் தயாரிப்பு நிலையில் இருந்தபோது, படத்தின் இணை தயாரிப்பாளர்களான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை ஏமாற்றி முருகதாஸ் பல கோடி ஏப்பம் விட்டுவிட்டார் என்ற செய்தி படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது தவிடுபொடியானது. தனது உதவியாளருக்கு முதல் படத்திலேயே இஷ்டத்துக்கு செலவு செய்ய அனுமதித்த முருகதாஸின் பெருந்தன்மைதான் படம் முழுக்க விரிந்தது. சரவணன் ‘எங்கேயும் எப்போதும்’ மூலம் முதல் படத்திலேயே ஒரு ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு பவுண்டரிகள் அடித்து தமிழ் சினிமா என்னும் தேரை சன்னதிக்கு இழுத்துச்சென்றவர் என்று அறிவிப்பதில் hellotamilcinema.com பெருமை கொள்கிறது..




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’