Saturday, May 25th

Last update12:53:29 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 2012 – ஒரு திரைப்பார்வை 03 மௌனகுரு: குருவைத் தொடராத சீடன்

மௌனகுரு: குருவைத் தொடராத சீடன்

  • PDF

2011 டிசம்பரில் வெளிவந்த மௌனகுரு நொந்துகிடந்த  தமிழ் சினிமாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கியது. ஆரம்பத்திலிருந்து எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்காத படமாக இருந்தது. வெளியான போதும் கூட. ஆனால் திரையில் பார்த்தபோது தமிழில் உருவாகத் தொடங்கியிருக்கும் ஒரு புதிய போக்கின்

தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஆரோக்கியமான முயற்சியாகத் தெரிந்தது.  சமகால வாழ்க்கையின் எளிமையான சந்தர்ப்பங்கள், சூழல்கள், ஆசைகள், பேராசைகள், பொறாமைகள், தற்செயல்களினூடாக ஒரு சாமான்ய இளைஞனின் அனுபவங்களாகப் பின்னப்பட்ட கதை. ஹீரோ எண்ட்ரி,

ஹீரோயின் எண்ட்ரி, இண்டர்வல் பிளாக் என்பதாக இல்லாமல் இயல்பாக இணையும் சம்பவங்களாய் விரிகிறது. இந்த ஹீரோவுக்காகவே பின்னப்பட்ட கதையாக இருக்கக் கூடும். அதிக உணர்ச்சிகளைக் கொட்டவேண்டியிராத பாத்திரம். தப்பித்தனர் ஹீரோவும் இயக்குநரும். இந்தப்பட்த்தின் பாத்திரத்தேர்வு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

போட்டோஜெனிக் என்கிற விசயத்தைக்கூட பொருட்படுத்தாமல் தேர்வுசெய்யப்பட்ட நடிகர்கள் படத்தை மிகப்புதிதாக்குகிறார்கள். ஷாட்டுக்கு ஷாட் புத்தம் புதிய சீருடை அணிந்துவரும் போலீஸ் பாத்திரங்களைப் பார்த்து பழக்கப்பட்ட தமிழ் ரசிகர்களுக்கு, கர்ப்பிணியாய் களைத்து ,எண்ணெய் வழியும் முகத்துடன் விசாரணை செய்யும் உமா ஒரு அருமையான கற்பனை. ஆனாலும் சாந்தகுமாரின் திரைக்கதைக்கு வலுசேர்ப்பதாக அவரின் உரையாடல்கள் அமையவில்லை. நிறைய இடங்களில் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு இடமிருந்தது. அடுத்தது இசையை சரியாகக் கையாளாமை. இது தமிழ்ப்படங்களுக்கெ உரிய சாபக்கேடு. ஒரு பழக்கப்பட்ட இசை உங்கள் பட்த்தை பழகிய தட்ததிற்கு இழுத்துவிடுகிறது.

ஒரு குற்றங்களை(crime) மையமாகக் கொண்ட படத்தில் நிறைய நிசப்தததிற்கு  இடமும்அவசியமும் உண்டு. இடைவெளியில்லாமல் இசை துரத்துகிறது. பல இடங்களில் இசை காட்சிக்கா, குறிப்பிட்ட சூழலுக்கா, பாத்திரத்திற்கா என்ற தெளிவு இசையமைப்பாளருக்கோ இயக்குநருக்கோ இருக்கவில்லை. எப்படியிருப்பினும் தூள், கில்லி எடுத்து தூள் பரத்தும் இயக்குநர் தரணியின் பள்ளியிலிருந்து வந்தாலும், மிகத் தனித்துவமான பாதையில் தொடங்கியிருக்கும் சாந்தகுமாரின் பயணம் மிகநம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.

Share