2011 திரைப்பார்வை ’ குறித்து கடந்த ஆண்டில் வெளியான 149 நேரடிப்படங்களில் சுமார் 30 படங்களைப் பற்றியாவது அலசி விட வேண்டும். அதுவும் ஜனவரி மாதத்துக்குள்ளாக அத்தனையையும் எழுதி முடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டோம்.
ஆனால் நினைப்பது ஒண்ணு நடப்பது ஒண்ணு அதனால முழிக்குது தமிழ்சினிமா.காம் கண்ணு கதைதான் இதிலும் நடந்தது.
புதுமைப்பித்தன் ‘காஞ்சனை’ என்னும் அற்புதமான த்ரில்லர் சிறுகதை எழுதியிருப்பார்.அந்தக்கதையை சத்தியமாகப்படித்திருக்க மாட்டார் ராகவேந்திரா லாரன்ஸ்.ஆனால் ‘காஞ்சனா பார்த்தபோது ஏனோ காஞ்சனை’ ஞாபகத்தில் வந்து போனது.
வழக்கமாக அரவாணிகளை கேவலமாக சித்தரித்த தமிழ்சினிமாவை செருப்பால் அடித்தது போல இருந்தது லாரன்சின் காஞ்சனா பாத்திரப்படைப்பு.
அதுவும் ஆணழகன், கட்டழகன் சரத்குமார் ஒரு அரவாணியாக நடிக்க முன்வந்ததற்கே, அவருக்கு தனியாக ஒரு ஆஸ்கார் குடுத்தாலும் தகும்.
இந்த ‘காஞ்சனா’ வை தனியாக பதிவு செய்ய முடியாமல் போனது வருத்தமே.
அடுத்து, அழகர்சாமியின் குதிரை’ மிகவும் சிலாகித்திருக்க வேண்டிய படம்.அப்படத்தின் கதை வசனகர்த்தா பாஸ்கர்சக்தியின் ‘ராஜபாட்டை தான் அந்தப்படம்.ஆனால் அந்தக்குதிரை அடுத்து போட்ட சாணியின் நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால், மூக்கைப்பிடித்துக்கொண்டு எழுதமுடியவில்லை.
ஷூட்டிங்கில் சொன்னதைவிட தயாரிப்பாளர்களுக்கே அதிகம் ‘பேக்கப்’ சொன்ன கரு.பழனியப்பனின்‘சதுரங்கம்’ பார்த்தபோது, ‘கருப்பு வெள்ளையை விட்டு வெளியே வராத கரு[த்து]. பழனியப்பன்’ என்று எழுத வேண்டும் என்றிருந்தேன். தலைப்போடு அது நின்றுவிட்டது.
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் என்று சேரன் சொன்னதை அவருக்கே சொல்ல ஆசைப்பட்டு ‘முரண்’ பட்டது ,முற்றிலும் விடுபட்டது.
'i am sam' என்ற படத்தை அப்பட்டமாகக்காப்பியடித்த களவாணி தெய்வத்திரு[ட்டு] மகளை துகிலுரிந்திருக்க வேண்டும்.சென்சார்போர்டை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யமுடியவில்லை.
இதுபோல் இன்னும் பரிசீலனையில் எடுத்திருக்கப்பட வேண்டிய சில படங்கள் விடுபட்டதற்காக வருந்துகிறோம்’ என்ற ஒரு வார்த்தை சொல்லித்தப்ப விரும்பவில்லை.2012 திரைப்பார்வை’ மூலம் இந்தக்குறையை ஈடுகட்டுவோம்.




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’