வெகுசிலரைத்தான் சினிமாவில் அவதாரம் போல் பார்த்தார்கள். அப்படி அவதாரமாய் வந்தார் பாலா.
தமிழ்சினிமா என்னும் தேரை நடுத்தெருவுக்கு இழுத்துவிட்ட பாலாவின் ‘அவன் இவன்’ அன்றுதான் ரிலீஸானது.
சேதுவில் ராஜ்யஸ்ரீ, விக்ரம் என்ற இரண்டே பைத்தியங்கள் இருந்தார்கள். நந்தாவிலும் கூட சூர்யா மற்றும் அந்தப்படத்தைத் தயாரித்த அபராஜித் ஃபிலிம்ஸ் என்ற இரண்டே பைத்தியங்கள்தான் இருந்தார்கள்.அடுத்து வந்த நான் கடவுளில் தமிழகம் முழுக்க தேடினாலும் இவ்வளவு பேர் கிடைப்பார்களா என்று திகைக்கும் அளவுக்கு படம் முழுக்க பைத்தியங்கள் நிரம்பி வழிந்தார்கள். இந்தத்தொடர்ச்சியின் உச்சக்கட்டமே ‘அவன் இவன்’.
சுமார் 20 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப்படம் பாலாவை நோக்கி ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பச் சொல்கிறது. இந்த பட்ஜெட்டில் பத்து ‘சேது’ எடுத்திருக்க முடியும். பதினைந்து ‘மவுனகுரு’ எடுத்திருக்க முடியும். இருபது ‘மைனா’ எடுத்திருக்க முடியும் என்கிற போது. 20 கோடி ரூபாயில் இப்படி ஒரு காஸ்ட்லி குப்பையை எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது பாலா?
இப்படி தாறுமாறாக செலவழித்து, ‘அவன் இவன்’ மாதிரி ஒரு படத்தை நீங்கள் தருகிற போது, பிதாமகன்’ படத்தில் இடம் பெற்ற பேமஸ் டயலாக்கான ‘லூஸாப்பா நீ’ என்று தயாரிப்பாளர்களை நோக்கி நீங்கள் கேட்பது போலவே தோணுகிறது.
அம்மாவும் பையனும் பேசிக்கொள்ளக்கூடாத அருவருப்பான வசனங்கள்,தெருவில் குடித்துவிட்டு அவர்கள் ஆடும் நாலந்தரமான குத்துப்பாட்டு, ஒரு உப்புப்பெறாத ஜமீந்தார் கேரக்டரை உருவாக்கி அவரை அம்மணமாக்கி படம் பார்க்க வந்தவர்களை குளிர் ஜுரத்தில் படுக்கவைத்து, டாக்டர்கள் வருமானத்தை அதிகரிக்கவைத்தது, உட்பட ஏகப்பட்ட ஏரியாக்களில் இவனா அவன் என்று பலரையும் திகைக்க வைத்தார் பாலா..[படத்துக்கு வசனம் எலக்கிய ச்சுடர் எஸ்.ராமகிருஸ்ணன்.இவர் அருவருப்பான விஷயங்களைப் பத்தி பேச மாட்டாராம். ஒன்லி எழுத மட்டுமே செய்வாராம். காசு குடுத்தீங்கன்னா இந்தப்படத்துக்கு எழுதுனதை விட இன்னும் தரைமட்டத்துக்கு எழுதியே தருவாராம்]
இந்தப்பிழையை ஒரே படத்தின் மூலம் , ஜஸ்ட் லைக் தேட்’ துடைத்து எறிந்து விட முடியும் பாலாவால்.இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் ‘எரியும் தணல்’ படத்தின் மூலமே கூட அது சாத்தியப்படலாம்.
பாலாவை நோக்கிய இந்த விமரிசனம் எழுதும்போது கூட ஒரு முக்கியமான பழமொழி தான் ஞாபகம் வருகிறது.அதுவும் அவரது ‘நான் கடவுள் ‘ பிச்சைக்காரன் மாதிரி ஒரு பிச்சைக்காரனின் பழமொழி தான்.
’’ஒரு நாளும் பிச்சை போடாத மவராசி இன்னைக்கும் போடலை. தினமும் போட்டுக்கிட்டிருந்த .........யா இவளுக்கு என்ன ஆச்சி? ’’ மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, இது பிச்சைக்காரர்களின் சப்ஜெக்டில் பி.ஹெச்.டி. படித்த உங்களுக்கு புரியும் பாலா.
தன்னை தலைக்குமேலே தூக்கி சுமந்து கொண்டிருந்த தமிழ்சினிமா ரசிகனின் காலுக்குகீழே பாலா தானாகவே தஞ்சமடைந்துகொண்ட படமே அவன் இவன்’. எனவே 2011-ல் தமிழ்சினிமா என்னும் தேரை ‘அவன் இவன்’ படம் மூலம் நடுத்தெருவுக்கு கொண்டு சென்று நிறுத்தியவர் பாலா என்பதை hellotamilcinema.com ஆழ்ந்த அனுதாபங்களுடன் பதிவு செய்கிறது.




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’