Thursday, May 23rd

Last update11:55:06 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

03

ஆடாமல் ஜெயித்தார் வெங்கட் பிரபு !

  • PDF

தமிழ் சாகசப் படங்களின் பட்டியலில் மங்காத்தாவிற்கு நிச்சயம் சிறப்பானதொரு இடம் இருக்கிறது.

அட்டகாசம் என்று சொல்லும் படியான சண்டைக் காட்சிகளும், அபாரம் என்றும் சொல்லும் படியான சாகசக் காட்சிகளும் படமெங்கும் நிறைந்திருந்தன.

ஆனாலும் யதார்த்தமான கதை மாந்தர்களே இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியவர்கள் என்று சொல்ல வேண்டும். மங்காத்தாவின் கதையிலும் கதாபாத்திரங்களிலும் வெளிப்பட்ட யதார்த்தம், வெங்கட் பிரபு பற்றிய ‘விளையாட்டுப் பையன்’ என்ற சித்திரத்தை முற்றிலும் கலைத்துப் போட்டு விட்டது.

மௌனகுரு: குருவைத் தொடராத சீடன்

  • PDF

2011 டிசம்பரில் வெளிவந்த மௌனகுரு நொந்துகிடந்த  தமிழ் சினிமாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கியது. ஆரம்பத்திலிருந்து எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்காத படமாக இருந்தது. வெளியான போதும் கூட. ஆனால் திரையில் பார்த்தபோது தமிழில் உருவாகத் தொடங்கியிருக்கும் ஒரு புதிய போக்கின்

தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஆரோக்கியமான முயற்சியாகத் தெரிந்தது.  சமகால வாழ்க்கையின் எளிமையான சந்தர்ப்பங்கள், சூழல்கள், ஆசைகள், பேராசைகள், பொறாமைகள், தற்செயல்களினூடாக ஒரு சாமான்ய இளைஞனின் அனுபவங்களாகப் பின்னப்பட்ட கதை. ஹீரோ எண்ட்ரி,

புலனாய வேண்டும் தனஞ்செயனை

  • PDF

தமிழ் சினிமா என்னும் தேரை இயக்குபவர்கள் இயக்குனர்கள் மட்டுமல்ல. அவர்கள் வேறு சிலர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தனஞ்செயன்.

தனஞ்செயன் ஒரு பன்முக ஆளுமை. ஆதாவது அவருக்கு பல முகங்கள் உண்டு.சில இடங்களில் அவர் அம்மாஞ்சி, சில இடங்களில் காமெடி பீஸ், சில இடங்களில் காரியக்காரர்.

நடுநிசி நாயாக கௌதம வாசுதேவ மேனன்.

  • PDF

2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முதல் இழிவு இயக்குனர் கௌதம் மூலம் நிகழ்ந்தது.

கௌதம் ஆங்கில நாவல்களை தழுவி படம் எடுப்பார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் கதைக்காக அவர் சரோஜாதேவியையும் தழுவுவார் என்பது இந்தப் படத்திற்குப் பின் தான் உலகிற்குத் தெரிய வந்தது. படம் மனதில் ஏற்படுத்திய அருவருப்பு நீங்க இரண்டு மூன்று நாட்கள் ஆனது.