ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?
இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார்.
இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும். ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.
ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.
அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.
இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?
உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.
9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.
இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.
நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?
அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர்
கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.



வீழ்வோம் என்று நினைத்தாயோ என்கிற கோஷத்தை முன்னிறுத்தி மே 18 ல் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நடக்க இருக்கிறது. இனவிடுதலைக்காகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டிலும் மாவீரன் பிரபாகரன் தலைமையில் தொடர்ந்த ஈழப்போரினை இந்திய அரசின் ஆதரவு , அன்றைய தமிழ் நாட்டை ஆண்டவர்களின் ஆதரவு உட்பட பல்வேறு நாடுகளின்
கூடங்குளம் படு ஸ்ட்ராங்காக இருக்கிறது.. நட்டு போல்ட்டெல்லாம் எக்ஸ்ட்ராவா போட்ருக்கோம். ஐந்நூறு வருஷத்துக்கு தாங்கும் என்று அப்துல் கலாமிலிருந்து மயில்சாமி வரை ஸர்ட்டிபிகேட் கொடுத்து முடிக்க மான்மேகன் ரஷ்ய அதிபருக்கு அடுத்த மாசமே ஸ்டார்ட் பண்ணிடுறேங்கோன்னு உறுதிப் பத்திரம் வாசிக்க..
ஏப்ரல் 2 ஆம் தேதி என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் கதையாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் சேர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் 'அடையாள'
வைரமுத்து கருவாச்சி காவியத்துக்குப் பின் படைத்த ஒரு இலக்கிய நாவல் படைப்பு தான் மூன்றாம் உலகப் போர். இதுவரை கலைஞரின் இலக்கிய சபாவில் சாதாரண கச்சேரி செய்பவராகவே தோன்றியிருக்கிற வைரமுத்து இதில் ஆச்சரியப்படும்படி சுற்றுப்புறச் சூழல்(Environemnt) பற்றியும் புவி வெப்பமாதல்(Global Warming) பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும், உலகமயமாதல்(Globalisation) பற்றியும் இவை எல்லாவற்றாலும் அழிந்து வரும் விவசாயம் பற்றியும் விரிவாக அலசியிருக்கிறார்.
ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ… அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம். இவ்வாறு தமிழ்நாட்டு வார இதழான ஆனந்தவிகடனில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன் முழுவிபரம்
நாளை ஆரம்பிக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் அடுத்த மாதம் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை நடைபெற இருக்கிறது. அப்போது ஏற்கனவே டம்மியாக கொடுக்கப்பட்ட 'கற்றுக் கொண்ட பாடுகள் மற்றும் இணக்கப்பாடுகள்(LLRC)' ரிப்போர்ட்டையே இலங்கை தூக்கிக் கடாசிவிட்ட நிலையில் தற்போது அதன் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப் போவதற்காக ஐநாவில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சேனல் 4 என்கிற தொலைக்காட்சி ஈழப் போராளிகளை சிங்கள ராணுவம்
ஹென்றி ஷாரியரின் ‘பாப்பிலான்
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பூமிக்கும் நிலாவுக்கும் இடையே ஒரு விண்கல்லை நகர்த்திக் கொண்டு வந்து வைக்க திட்டமிட்டுள்ளது.
கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’