தங்கர் பச்சான் இயக்கத்தில் அண்ணன் டி.ராஜேந்தர் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் கிளியாரே?’- டி.ரமேஷ், திருவண்ணாமலை.
கூட பவர்ஸ்டாரையும் சேத்துக்கலாமே. தங்கர் இயக்கத்துல மூனு பேரும் அண்ணன் தம்பியா நடிக்கிற மாதிரி என் கிட்ட ஒரு கதை இருக்கு.
பவர் மூத்தவர், .டி.ஆர். நடுசெண்டரு தம்பி. தங்கர் கடைக்குட்டி. பவருக்கு அண்ணி நயன் தாரா. டி.ஆருக்கு த்ரிஷா.
தம்பி தங்கருக்கு சொந்த வாயில தோஷம் இருக்கதால பொண்ணே கிடைக்கலை. தம்பிக்கு சரியான பொண்ணு அமையிற வரைக்கும், தங்களோட முதலிரவை
கிளிப்பேச்சு கேட்க வா
கிளியார் பதில்கள்: ’பாக்குறவங்க கதி கலங்குற மாதிரி ஒரு இண்டர்வெல்
- Tuesday, 16 October 2012 00:53
- administrator
- Hits: 4678
கிளியார் பதில்கள் ; அஞ்சலி வீட்டு வேலைக்கார வீட்டுக்காரன்?
- Wednesday, 26 September 2012 23:03
- administrator
- Hits: 2597
வருஷத்துக்கு 10 படங்கள் கூட ஓடாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 24 படங்கள் வெளியானதாக படித்தேன். இப்படி படம் எடுக்க வருபவர்களின் கதை, திரைக்கதை என்ன கிளியாரே?’ மாதவன், நாகர்கோயில்.
படம் எடுக்க வருபவர்கள் எல்லாம் படம் எடுக்க வருபவர்கள் அல்ல.குறுக்கு வழியில் சம்பாதித்ததை இங்கே வந்து கொட்டி குஷாலாக இருக்க ஒரு கோஷ்டி வருகிறது. இன்னும் சிலருக்கு பணம் மட்டும் போதாமல் ’பேர்’ ஆசை வேர் விடுகிறது. அது மட்டுமின்றி 'வேறு' ஆசைகளுடன் இங்கே வருபவர்கள் அதிகம்.
கிளியார் பதில்கள் ; காஜல் அகர்வாலும் வள்ளுவரின் காமத்துப்பாலும்
- Tuesday, 11 September 2012 14:52
- administrator
- Hits: 4753
கே; இதுவரை பிரகாசிக்காமல் போன பாக்கியராஜின் வாரிசு சாந்தனு, தங்கர் பச்சானின் ‘அம்மாவின் கைபேசி’க்கு அப்புறமாவது பேசப்படுவாரா கிளியாரே?’ ஞானசம்பந்தன், கோவை.
கி ; இதற்கு முன்பு தங்கரின் படத்தில் நடித்த சேரன், பார்த்திபன்,சத்யராஜ், நரேன்,மற்றும் தங்கர்பச்சான் போன்றவர்களின் தற்போதைய நிலவரம் தெரிந்திருந்தும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா?
’கிடைக்கிற சம்பளதுக்கு வருஷத்துக்கு ஒன்பது படத்துக்கு குறையாம
கிளியார் பதில்கள்: என்னமோ நடக்குது. ஆனா என்னதான் நடக்குது?
- Tuesday, 28 August 2012 13:41
- administrator
- Hits: 2366
கே; நமது கேப்டனின் வாரிசு சண்முக பாண்டியன் கிரகப்பிரவேசம் ...ஸாரி திரையுலகப்பிரவேசம் என்ன ஆச்சி கிளியாரே? தனசேகரன், கோவில்பட்டி.
புது டைரக்டரை வைத்துக்கொண்டு இரட்டை ரிஸ்க் எடுக்க கேப்டன் தயாராக இல்லை. முருகதாஸ் மாதிரி முன்னணி இயக்குனர்களிடம் போனால், கேப்டனே மூர்ச்சையடையும் அளவில் சம்பளம் கேட்கிறார்கள்.
இடையில் ஜிம், ஸ்விம்மிங், குதிரையேற்றம், கழுதையேற்றம் என்று ஆய கலைகளும் கற்று பாய தயாராக
கிளியார் பதில்கள் : நயன்தாரா ‘இடத்தை’ பிடிப்பாரா ஸ்ருதி?
- Friday, 03 August 2012 00:35
- administrator
- Hits: 2531
கே:‘மாற்றான்’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை திடீரென்று மலேசியாவுக்கு மாற்றிவிட்டாரே கே. வி.ஆனந்த்?’ சவுந்தர் ராஜன், திருவண்ணாமலை.
கி: தனது கருவில், பத்து மாதம் சுமந்து பெற்ற இரட்டைப்பிள்ளைகளை, திருட்டு டிவி.டி. என்னும் மாற்றாந்தாயிடமிருந்து திருடிக்கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் தமிழர்கள் மீது, குறிப்பாக, தமிழ்ப்பத்திரிகையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஆனந்த்.
கிளிப்பேச்சு கேட்க வா: ' மீரே டைரக்டரண்டி’’
- Monday, 09 July 2012 23:16
- administrator
- Hits: 2899
கே:தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகை ஊர்வசி தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாரே?’ – ஜான்சன், பொள்ளாச்சி.
கி: உங்கள் கேள்வியை சற்றே திருத்திக்கொள்ளுங்கள். மனோஜ்.கே. ஜெயன்
கிளியார் பதில்கள் - இலியானா டீச்சரின் பாடம்
- Monday, 25 June 2012 23:13
- administrator
- Hits: 2869
கே: ‘சகுனி’ விளம்பரங்களில் ஆர்ப்பரிக்கிறார்களே, படம் உண்மையிலேயே அவ்வளவு பெரிய வெற்றிப்படமா? ஞானப்பிரகாசம்,சென்னிமலை.
கி: ‘கே’ பயலுக ஊருல ’கி’ பயலுக நாட்டாமை’ என்ற பிரசித்தி பெற்ற பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் பல சமயங்களில் நடப்பது அதுதான்.
நேற்று ‘சகுனியாளர்கள், அவர்களே வெளியிட்டிருக்கும் ஒரு பத்திரிகைக்
கிளிப்பேச்சு கேட்க வா - 12ஜூன்12
- Tuesday, 12 June 2012 00:30
- administrator
- Hits: 494
உலக நாயகன் கமல் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கி, நடிக்கப்போகிறாரமே? ரமேஷ், திண்டுக்கல்.
கமல் போன்ற உலக நாயகன்கள் கூட ஹாலிவுட் படம் இயக்குவது, ஏதோ ஒரு பெருமையடிக்கும் விசயம் என்று நினைப்பதை நினைக்கும்போது,
கிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து?
- Wednesday, 23 May 2012 00:57
- administrator
- Hits: 706
வாங்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷா ருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டது, பாக்கவே ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருந்ததே? ஷியாம், நாகர்கோயில்.
பாதுகாப்பு அதிகாரியோ ஷா ருக் கான் சரக்கடித்துவிட்டு தன்னோடு சண்டை போட்டதாகச்சொல்கிறார். ஷா ருக்கோ குழந்தைகளுக்காக பரிந்து பேசினதை ஊதிப்பெரிதாக்கிவிட்டார்கள் என்கிறார்.
நடந்தது என்னவாக இருந்தாலும் நான் ஷாருக் என்கிற குழந்தையை ஆதரிக்கவே விரும்புகிறேன்.
‘வழக்கு எண் 18/9’ வசூல் ரீதியாகவும் பெரிய பெற்றிப்படமா? பன்னீர்ச்செல்வம், சென்னை.
எனக்கு கிடைத்த தகவல்படி, ஏ’ செண்டர்கள் தவிர்த்து படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
ஆனால் இலக்கிய வட்டாரங்களில் படம் செம ஹிட். படத்தில் பாலாஜி சக்திவேலுக்கே தெரியாத ‘தொன்மங்கள்,படிமங்கள், குறியீடுகளையெல்லாம் கண்டுபிடித்து கொண்டாடுகிறார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இரண்டு படங்கள்’ என்று ‘ராட்டினம்’ படத்துக்கு விளம்பரம் செய்கிறார்களே? மனோகரன், திருச்சி.
இவங்க என்ன புரட்டிப்போடுறது ? தமிழ்சினிமா ஏற்கனவே தலைகுப்புற கவுந்துதான் கிடக்குதுன்றேன்.
விகடனிலிருந்து மதன் வெளியேற்றப்பட்டது குறித்து கிளியாரின் கருத்து? கண்ணபிரான், தேனி.
ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதைத்தாண்டி, மதன் செய்த எதையுமே நான் ரசித்ததில்லை. அவர் சுஜாதாவுக்கு இணையான ஒரு எழுத்தாளர் போலவும், கரைகண்ட சினிமா விமரிசகர் போலவும் ஒரு பிம்பத்தை உண்டாக்கிய பெரும்பாவம் விகடனையே சாரும். அவர் வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு எந்திரன் அவ்வளவே.
’அம்மாவின் ஜால்ரா’ என்று இப்போது மிக அசிங்கப்படுத்தி அவரை விகடனிலிருந்து வெளியேற்றியதன் மூலம், அந்தப்பாவத்தில் ஒரு ஐந்து சதவிகிதம் குறைந்திருக்கிறது விகடனுக்கு.
ஆமா, விகடன்ல, நடுநிலை நடுநிலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது கிலோ என்ன வெலப்பா?


த்ரிஷா முதிர்கன்னியாமே? ஒரு அண்ணன் கவலை
- Monday, 07 May 2012 19:32
- administrator
- Hits: 2817
‘தினத்தந்தி’யில் படித்தேன், எனது அபிமான இயக்குனர் பாலா சொந்தமாக ‘கேரவன்’ வாங்கியிருக்கிறாராமே ? தமிழ் இண்டஸ்ட்ரியில், வேறு இயக்குனர்கள் யாராவது கேரவன் வைத்திருக்கிறார்களா?? ரவிச்சந்திரன், காஞ்சிபுரம்.
கி: என்னது பூஜா பாலா படத்துலருந்து தப்பிச்சி ஓடிட்டாரா ? ஓ… இப்ப அந்த கேரக்டர்லதான்,’அரவான்’ தன்ஷிகா நடிக்கப்போறாரா ? ஓ.கே.. ஓ.கே..
காஞ்சிபுரத்துலருந்து ரவிச்சந்திரன்னு ஒருத்தர் கேரவன் பத்தி ஏதோ கேள்வி கேக்கனும்னு ஆசைப்பட்டிருப்பாரு போல,… பேசிக்கிட்டுருக்கப்பவே லைன் பாதியில கட் ஆயிடுச்சி.
கிளியார் பதில்கள்
- Thursday, 26 April 2012 00:41
- administrator
- Hits: 2701
கே: என்ன கிளியாரே, அடக்க ஒடுக்கமாக பக்கத்து வீட்டுப் பாப்பா போல் இருந்த அஞ்சலியும், பொது நிகழ்ச்சிகளில் ஆபாசமாக உடையணியத் துவங்கி விட்டாரே ? பால்ராஜ், சங்கரன்கோவில்.
கி: சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே’ கலகலப்பு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியைத்தானே சொல்கிறீர். அடியேனும் போயிருந்தேன். ‘எங்கேயும்




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’