டிக்-டாக் குறும்படம்

நடிப்பு: மார்கன், மௌரிஸ், வலீ, ஸ்டீவ்
இசை-எமான்ஸிபேட்டர்(Emancipator)
கதை,திரைக்கதை,எடிட்டிங்,ஒளிப்பதிவு, இயக்கம்-இயன் சி(Ien Chi)
ஓடும் நேரம் – 5 நிமிடம்.
மொழி – ஆங்கிலம்.

“கிட்டத்தட்ட எல்லாமே, வெளிப்புற எதிர்பார்ப்புக்கள் எல்லாமே, கர்வம், தோல்வி பற்றிய பயம் போன்ற எல்லாமே, மரணத்தின் முன்னால் உதிர்ந்து விழுந்து விடும்; மிஞ்சியிருப்பது எவை நிஜமாகவே முக்கியமானவையோ அவை மட்டுமே.”
—ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs. Apple computers founder.)

புகழ் பெற்ற ஆப்பிள் கம்ப்யூட்டரின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் போன வருடம் கேன்சர் வந்து, சில மாதங்களே அவருக்கு வாழ்க்கை எனத் தேதி குறிப்பிடப்பட்டு பின் அக்டோபரில் இறந்து போனார். அந்தத் தருணங்களில் அவர் கூறிய வார்த்தைகளாக இவை இருக்கக்கூடும்.

மேலே அவர் சொன்ன அந்த வரிகளுடன் தான் ஆரம்பிக்கிறது படம். ஆனால் அதை நீங்கள் முதலில் பார்க்கப் போவதில்லை.

கல்லூரி ஹாஸ்டலில் இரு நண்பர்கள் பேசிக் கொள்வதாக ஆரம்பித்து அதில் எமிட் என்பவன் உடனே வேக வேகமாக தலை தெறிக்க உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவந்து அதே கல்லூரியில் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தனது காதலியை பார்க்கிறான். அவனுக்கு என்னதான் ஆனது ? ஏன் அப்படி ஓடி வந்து பார்க்கிறான் ? அது தான் இந்தச் சின்னப் படத்தின் கதை.

படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே ஷாட் தான். அதுவும் படம் முழுக்க ரிவர்ஸில் ஓடுகிறது. அதாவது முதலில் நாம் பார்ப்பது க்ளைமேக்ஸ் காட்சியை. ஆனாலும் படம் முழுக்க நேரடியாக நடந்தது போல, சாதாரணமாக பேசப்பட்ட வசனம் போலவே தோன்றும். ரொம்ப தலையைச் சுற்றுகிறதா? படத்தைப் பாருங்கள். இரண்டாவது தடவை பார்க்காமல் கண்டிப்பாக உங்களுக்கு எதுவும் கோர்வையாகப் புரியாது.

படத்தின் கிட்டத்தட்ட அனைத்து பொறுப்புகளையும், டைரக்ஷனையும் சேர்த்து செய்த ‘இயன் சி’ செய்திருக்கும் எளிமையான ஆனால் அருமையான முயற்சி.

டிக் டாக் என்று பின்னோக்கித் துடிக்கும் கடிகாரத்துடிப்பைக் கீழே பாருங்கள்.

அல்லது இங்கே க்ளிக்குங்கள்.

டிக் டாக் (Tick Tock)

நடிப்பு: மார்கன், மௌரிஸ், வலீ, ஸ்டீவ்

இசை-எமான்ஸிபேட்டர்(Emancipator)

கதை,திரைக்கதை,எடிட்டிங்,ஒளிப்பதிவு, இயக்கம்-இயன் சி(Ien Chi)

ஓடும் நேரம் – 5 நிமிடம்.

மொழி – ஆங்கிலம்.

கிட்டத்தட்ட எல்லாமே, வெளிப்புற எதிர்பார்ப்புக்கள் எல்லாமே, கர்வம், தோல்வி பற்றிய பயம் போன்ற எல்லாமே, மரணத்தின் முன்னால் உதிர்ந்து விழுந்து விடும்; மிஞ்சியிருப்பது எவை நிஜமாகவே முக்கியமானவையோ அவை மட்டுமே.

n ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs. Apple computers founder.)

புகழ் பெற்ற ஆப்பிள் கம்ப்யூட்டரின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சர் வந்து போன வருடம் சில மாதங்களே அவருக்கு வாழ்க்கை எனத் தேதி குறிப்பிடப்பட்டு பின் அக்டோபரில் இறந்தார். அந்தத் தருணங்களில் அவர் கூறிய வார்த்தைகளாக இவை இருக்கக்கூடும்.

மேலே அவர் சொன்ன அந்த வரிகளுடன் தான் ஆரம்பிக்கிறது படம். ஆனால் அதை நீங்கள் முதலில் பார்க்கப் போவதில்லை.

கல்லூரி ஹாஸ்டலில் இரு நண்பர்கள் பேசிக் கொள்வதாக ஆரம்பித்து அதில் எமிட் என்பவன் உடனே வேக வேகமாக தலை தெறிக்க உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவந்து அதே கல்லூரியில் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தனது காதலியை பார்க்கிறான். அவனுக்கு என்னதான் ஆனது ? ஏன் அப்படி ஓடி வந்து பார்க்கிறான் ? அது தான் இந்தச் சின்னப் படத்தின் கதை.

படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே ஷாட் தான். அதுவும் படம் முழுக்க ரிவர்ஸில் ஓடுகிறது. அதாவது முதலில் நாம் பார்ப்பது க்ளைமேக்ஸ் காட்சியை. ஆனாலும் படம் முழுக்க நேரடியாக நடந்தது போல, சாதாரணமாக பேசப்பட்ட வசனம் போலவே தோன்றும். ரொம்ப தலையைச் சுற்றுகிறதா? படத்தைப் பாருங்கள். இரண்டாவது தடவை பார்க்காமல் கண்டிப்பாக உங்களுக்கு எதுவும் கோர்வையாகப் புரியாது.

படத்தின் கிட்டத்தட்ட அனைத்து பொறுப்புகளையும், டைரக்ஷனையும் சேர்த்து செய்த இயன் சி செய்திருக்கும் எளிமையான ஆனால் அருமையான முயற்சி.

டிக் டாக் என்னும் கடிகாரத்துடிப்பைக் கீழே பாருங்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.