ஆர்னால்ட் மனைவி மரியாவுடன்

நமக்கெல்லாம் தெரிந்த உலக ஆணழகன், (கமாண்டோ) புகழ் பெற்ற நடிகர், ஆர்னால்ட் ஸ்வார்செனகர்(Arnold Schwarzenegger). 80களில் பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்த ஆர்னால்ட்டின் மாமியார் யூனிஸ் ஷ்ரிவர் (Eunice Shriver) தான் அவரை இவ்வாறு வேவு பார்த்தவர்.

1986ல் ஆர்னால்ட்டுக்கும் மரியா(Maria)வுக்கும் திருமணம் நடந்தது.
மரியா மூன்று ஆண்டுகளாக குழந்தைகளே உருவாகாமலிருந்த்தால் சந்தேகமடைந்தார் அவரது தாய் ஷ்ரிவர்.

அதிக அளவு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீரர்கள் ஸ்டீராய்டுகளை(Steroids) அதிக அளவில் உட்கொள்வதால் அவர்களது விந்தணுக்கள் ரொம்ப வீக்காகி கர்ப்பம் தரிப்பது முடியாமல் போகும்.

ஆர்னால்டோ மூன்று முறை உலக ஆணழகன் பட்டம் வென்றவர். ஆணழகன் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் ஸ்டீராய்டுகளை உபயோகிப்பது சகஜம்.

மரியாவின் அம்மா ஷ்ரிவர் ஜான் எப். கென்னடியின் தங்கை ஆவார். அவர் தனக்குத் தெரிந்த மிகச் சிறந்த டாக்டர்களை அணுகி ஆர்னால்ட் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்று சோதித்துத் தருமாறு கேட்டுக்கொள்ள அதன்படி அவர்கள் ரகசியமாய் ஆர்னால்ட்டுக்குத் தெரியாமல் ஆர்னால்டை வேறு சோதனைகளுக்கு வரும்போது ஆண்மைச் சோதனையும் செய்து ரிப்போர்ட் அளித்துள்ளனர்.

இதை அவர் தனது மகளிடம் அளித்துள்ளார். தற்செயலாக தன் மனைவியின் அறையில் இருந்த டேபிளில் இந்த ரிப்போர்ட்டைக் கண்டு படித்த ஆர்னால்ட் கோபப்படுவதற்குப் பதில் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

அதற்குப் பிறகு ஆர்னால்ட் – மரியா தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

தற்போது கலிபோர்னியா மாநில கவர்னராக இருந்து ரிட்டையர்டாகிவிட்ட ஆர்னால்ட் தன் வாழ்க்கை சரிதத்தை ‘டோட்டல் ரீகால்: என்னுடைய நம்பமுடியாத நிஜ வாழ்க்கைக் கதை’(Total Recall: My Unbelievably True Life Story) என்கிற அவரது புகழ்பெற்ற படத்தின் பெயரிலேயே எழுதியிருக்கிறார். அதில் மேற்கண்ட நிகழ்வை நினைவு கூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தனது அந்தரங்க வாழ்வில் நடந்த துன்பமான விஷயங்களை வெளிப்படையாக எழுதியுள்ளார்.

ஆர்னால்ட் கலிபோர்னியா கவர்னராக இருந்து பதவிக்காலம் முடிந்த அடுத்த நாள், அவரது 65வது வயதில் அவரது மனைவி மரியா

ஆர்னால்ட் குடும்பத்துடன்
ஆர்னால்ட் குடும்பத்துடன்
அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். 25 வருட திருமண வாழ்வை முறித்துக் கொண்டார்.

அதற்கான காரணம் ஆர்னால்ட்டிற்கும் அவரது வீட்டையும் குழந்தைகளையும் நீண்ட நாட்கள் கவனித்துக் கொண்டிருந்த வீட்டு வேலைக்காரப் பெண் மில்ட்ரட் பேனா(Mildred Baena) வுடன் ஆர்னால்ட்டுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு 1997ல் ஜோசப் என்கிற மகனும் பிறந்துள்ளார்.

ஆரம்பத்தில் சந்தேகமுற்ற மனைவி மரியாவிடம் தனக்கும் மில்ட்ரட்டுக்குமிடையே எந்த்த் தொடர்புமில்லை என்று ஆர்னால்ட் மறுத்ததோடு மில்ட்ரட்டின் கணவருக்கும், மில்ட்ரட்டுக்கும் பிறந்த குழந்தைதான் ஜோசப் என்று உறுதியாக அவரிடம் சத்தியம் செய்து கூறியுள்ளார்.

தற்போது பதினைந்து வயதாகும் ஜோசப் தோற்றத்தில் ஆர்னால்டைப் போலவே இருப்பது மரியாவின் சந்தேகத்தை மேலும் உறுதிப் படுத்தவே அவர் விவாகரத்து அலுவலர் முன்னிலையில் இது உண்மையா என்று கேட்க ஆர்னால்ட் தயங்கி உண்மையை ஒப்புக் கொண்டார்.

அதற்குப் பின் ஆர்னால்ட் எவ்வளவோ மன்றாடியும் கேளாமல் மரியா விவாகரத்து பெற்று அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இவ்வாறு தன் வாழ்வின் பல இன்ப துன்ப நிகழ்வுகளை வெளிப்படையாக அசை போட்டுள்ளார் ஆர்னால்ட் ஸ்வார்செனக்கர்.

ஒருவன் மனது ஒன்பதடா..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..

மில்ட்ரெட் மகன் ஜோசப்புடன்
மில்ட்ரெட் மகன் ஜோசப்புடன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.