ரெட்டிட் (reddit) எனும் இணையதளம் அடிக்கடி வித்தியாசமான டாபிக்குகளில் கருத்துக்களை மக்களிடமிருந்து சேகரிக்கும். சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு குடிப்பதைத் தடை செய்வது பற்றி ஆலோசிக்கப்போவதாகச் சொல்லியிருந்தது. அதையொட்டி “இந்தியாவே ஒரு மதுபானக் கடை என்றால் ஒவ்வொரு மாநிலமும் அந்த பாரில் குடித்துக்கொண்டிருக்கும் ஒரு குடிகாரன் என்றால் ஒவ்வொருவரும் பாரில் எப்படி நடந்துகொள்வான்?” என்கிற கற்பனையான ஒரு கேள்வியை ரெட்டிட் தளம் எழுப்பியிருந்தது. அதற்கு ஒவ்வொரு மாநிலம் பற்றியும் குடிமகன்களிடமிருந்து வந்த சுவாராசியமான கமெண்ட்டுகள் சில கீழே..

குஜராத்:
‘நான் குடிக்கவே மாட்டேன்’ என்று சொல்வான். ஆனால் வேறொரு இடத்தில் சொந்தமாகவே கடை வைத்திருப்பான். இரவு முழுதும் கையிலுள்ள பணத்தை எண்ணிக்கொண்டே இருப்பான். அதே நேரம் நைஸாக மற்ற டேபிள்களிலிருந்து சரக்குகளை லவட்டிக்கொள்வான்.

கோவா:
‘புல்’ போதையுடனே பாருக்குள் வருவான். ஒரே நேரத்தில் இரண்டு வகையான பீர்களை உறிஞ்சிக்குடிப்பான். வேறு யாரையும் பற்றிக் கவலைப்படாமல் அமைதியாகக் குடித்து விட்டுப் போவான். போகும் வழியில் ஒரு அழகான ரஷ்ய இளம்பெண்ணை சந்திப்பான்.

ராஜஸ்தான்:
கைகளில் ஹூக்கா வைத்து புகைத்தபடியே குடித்துக் கொண்டிருப்பான். ரொம்ப ஓவராக குடித்துவிட்டு பழைய கால ராஜபுத்திரர்களின் பொற்காலம் பற்றி அளந்து விட்டுக்கொண்டிருப்பான்.

மே.வங்கம்:
ரொம்ப ‘சீப்’பான மக்களின் பீர்குடிப்பான். முதலாளிகளின் பீர் அல்ல. பழைய காலத்து தொழிலாளர் நினைவுகளைப் பற்றிப் பேசியபடியே ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைக் கேட்பான். என்ன பேச ஆரம்பித்தாலும் அது அரசியலில் வந்து முடியும்.

பீஹார்:
நாட்டுச் சரக்கு குடிப்பான். காமரியா லாலிபாப் பாட்டு கேட்பான். ஆனால் சரியாக இரவு 11 மணிக்கு கிளம்பி வீட்டுக்குப் போய்விடுவான். அதன் பின் விடிய விடிய யு.பி.எஸ்.சி பரீட்சைக்குப் படிப்பான்.

டெல்லி:
இருப்பதிலேயே காஸ்ட்லியான சரக்கை வாங்கிக் குடிப்பான். ஹனி சிங்கின் யோ யோ பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவான். ஆடும்போதே கையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி கண்டபடி சுடுவான். ‘நிப்பாட்டு’ என்று யாராவது தடுத்தால் “எங்கப்பன் யாருன்னு புரிஞ்சதா?”
என்று கேட்பான்.

தமிழ்நாடு:
ஒரு ப்ளாஸ்டிக் க்ளாஸ், ஒரு வாட்டர் பாக்கெட் மற்றும் ஒரு ஊறுகாய் பாக்கெட்டோடு வருவான். அரசு விற்கும் ஓல்ட் மன்க் சரக்கை மட்டுமே அந்த ப்ளாஸ்டிக் க்ளாஸில் ஊற்றி, பாக்கெட் தண்ணீரை மிக்ஸ் செய்து குடிப்பான். ஊறுகாய் தான் சைட் டிஷ். சரக்கடிக்க கூடவே 4 வயது
குழந்தைகளையும் கூட்டி வருவான்.

ஜம்மு-காஷ்மீர்:
நாம் சரியான பாருக்கு தான் வந்திருக்கிறோமா ? அல்லது பக்கத்துக் கடைக்குப் போகவேண்டுமா ? அல்லது நாமளே சொந்த பார் ஆரம்பிக்கணுமா ? என்று ஒரே குழப்பம் இவனுக்கு.

கேரளா:
கடையில் இருக்கும் எல்லா சரக்குகளிலும் ஒவ்வொரு ‘பெக்’ அடிப்பான். என்.டி.ஏ, மோடி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் என்று எல்லாவற்றையும் மணிக்கணக்கில் விளாசித்தள்ளுவான். முடிந்ததும் நேரடியாக துபாய் ப்ளைட்டை பிடிக்கப் போய்விடுவான்.

Related Images: