Hema Sankar… அமெரிக்காவிலிருந்து!

ஒரு நாளைக்கு ஒரு முறையாச்சும் இப்டி யோசிச்சிடுவேன். சில சமயம் அட இங்கிருந்தது போதும் , பேசாம குழந்தைங்கள கூட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா இருக்கலாம்னு தோணும்.

Hospital accessibility, diagnosis and treatment are very costly, slow and poor in USA. உடம்புக்கு வராத வரைக்கும் ஓகே, ஆனா உடம்பு சரியில்லாட்டி இங்க யாரும் உதவிக்கும் இல்லாம தவிக்க வேண்டியதா தான் இருக்கு..

நம்ம ஊர்ல தெருவுக்கு தெரு மருத்துவர்கள்..Locality ku ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் இருந்து சிறந்த multi specialty hospitals வரைக்கும் இருக்கு. தமிழக மருத்துவர்கள் diagnosis பண்றதுல அவ்ளோ quick. அதே இங்கயோ 3-4 visit எடுக்கும் correct diagnosis பண்றதுக்கு( இது தான உங்க டக்குனு இருக்கும்). Lab test குடுக்க appointment போடனும், அதோட result வரவரைக்கும் நம்ம தான் follow up பண்ணனும்.

Emergency எனப்படும் ERக்கு போனா நோயின் பாதிப்பை விட ER bill என்னவா வரும்ங்கற trauma மிகவும் அதிகம். Speciality doctors கிட்ட appointment கிடைக்கறதுக்கு குறைந்த பட்சம் 2 மாசம் ஆகும். Dermatologist, ophthalmologist எல்லாத்துக்கும் appointment கிடைக்கறதும் கஷ்டம்.

அப்டியே கிடைச்சாலும் முன்பு சொன்னத போல் diagnosis very slow..மருத்துவமனை எல்லாமே corporate private தான். மருத்துவ காப்பீடு ( insurance ) இருந்தா கூட அதில் வெறும் annual checkup, தடுப்பூசிக்கு மட்டுமே பயன்படும்.

குழந்தைக்கு அல்லது நமக்கோ தீடீர்னு உடம்புக்கு முடியலனா கூட உடனடி appointment கிடைப்பது கஷ்டம். அதுக்காக urgent careநு ஒண்ணு வெச்சிற்காங்க . இதுக்கு போன Insurance plan ஏத்த மாதிரி ரொம்ப கம்மியா தான் coverage ஆகும். மீதி நம்ம கை காசு(co pay ) தான்.

Example: ஒரு மாசம் முன்ன பைய்யனுக்கு விட்டு விட்டு காய்ச்சல். சனிக்கிழமைங்கறதுனால அவனோட pediatric hospital closed( mostly primary physicians/hospitals r closed in sat/sun) . உடனே பக்கத்துல இருக்க urgent careக்கு போனோம். காய்ச்சலுக்கு Tylenol ( like paracetamol ) மட்டும் குடுத்துட்டு இதையே 4-6 மணி நேரத்துக்கு ஒரு முறை போடுங்கனு சொன்னாங்க.

வீட்டுக்கு மருந்து வாங்கிட்டு வந்துட்டோம்.அடுத்த பத்து நாட்கள்ல urgent care bill வந்துச்சு. Insurance claim பண்ணது போக copay ( நம்ம கைக்காசு ) மட்டுமே $300. இத்தனைக்கும் Flu test கூட பண்ணல. அவசரத்துக்கு general physician பாக்க முடியாத பட்சத்தில் இப்டி urgent careக்கு தான் போயாகனும்.

Emergency ER சொல்லவே வேணாம். Visaல இருக்க எல்லாரோட நிலையும் இதுதான். அங்க இருந்த வரைக்கும் இந்த மாதிரி health issuesகு, உடம்புக்கு எதனா வந்துடுச்சுனா என்ன பண்றதுனு கவல பட்டது கிடையாது.

அப்டியே உடம்புக்கு முடியலனா ‘ தோ பக்கத்துல தான் டாக்டர் இருக்கார், காலைல appointment போட்டுட்டு காட்டிட்டு வந்துடலாம்னு தைரியமா இருக்கும். ஆனா இங்க Health Uncertainty & insecurity இருந்துட்டே தான் இருக்கு.

இதுவும் கடந்து போகும்னு சொல்லி தான் நாட்கள தள்ளிட்டு இருக்கோம். இங்க இருக்க எல்லாருக்கும் இங்க இருக்க மருத்துவ சேவையில் இதே கருத்து தான் இருக்கும்.

வெளியில western country, வல்லரசு நாட்ல இருக்கோம்னு சொல்லிக்கிட்டாலும், இது ஒரு capitalist country. வெளிய மக்களின் நலன் மாதிரி தெரிஞ்சாலும் , இங்கு முழுக்க முழுக்க corporate கம்பெனி மாதிரி தான் health sector.

தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு is one of the fine models of the nation. நீட் தேர்வு இல்லாம தான் இத்தனை வருடமா இவ்ளோ மருத்துவர்களை, மருத்துமனைகளை உறுவாக்கிற்கோம். திராவிடத்தால் வீழ்ந்தோம்னு யாராவது சொன்னா.. …“ டேய் கொஞ்சம் வெளிய வந்து உலகத்துல என்ன நடக்குதுனு பாருங்கடானு” சொல்லுங்க.

– ஹேமா சங்கர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.