80களில் ஆங்கிலப்படங்கள் என்றால் ஜெம்ஸ்பாண்ட், புரூஸ் லீ போன்ற ஆக்ஷன் படங்கள் தான்னு நினைச்சுக்கிட்டிருந்த காலம்….

சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி தவிர அவர்கள் காமெடி படம் கூட எடுப்பார்கள்னு தெரிஞ்சது இந்த படத்தில் தான்.

The gods must be crazy…

உண்மையில் இது ஒரு சௌத் ஆஃப்ரிக்கன் மூவி தான். ஆனா இதன் பெருவாரியான வரவேற்பால் உலகம் முழுக்க வெற்றி வலம் வந்துச்சு…சென்னையில் சஃபையரில் ரொம்ப நாள் ஓடியதுன்னு ஞாபகம்.

கதை ஒரு பழங்குடி இனத்தில் நடக்கும் சம்பவங்கள் தான். பழங்குடி இனங்கள் வாழும் கலஹாரி பாலைவனப்பகுதி சௌத் ஆப்ரிக்கா, போஸ்னியா, நமீபியா எல்லைகளை கொண்டது. இங்கு ஒரு சிறு குழுவின் பழங்குடி தலைவன் தான் Xi. ஒரு நாள் அவங்க கிழங்கு வேர்கள் எடுக்கும் நேரத்தில் ஒரு விமானத்தில் குடித்து விட்டு எறியப்படும் கோக் பாட்டிலால் தான் கதையே. கீழே விழுந்து உடையாமல் இருக்கும் கோக் பாட்டிலை தெய்வம் தந்த பொருளாக நினைத்து எல்லோரும் அதிசயிக்கின்றனர். நாளடைவில் அந்த பாட்டில் அவர்களின் வாழ்வின் அங்கமாக மாறுகிறது. காய்களை உடைக்க, கொட்டைகளை பொடியாக்க, தோல்களை இழுத்து சரியாக்க, அதன் முன்பக்க வட்டமௌ கூட டிசைனாக வரைய அந்த பாட்டில் உபயோகப்படுகிறது. எப்போதும் அப்பாட்டில் பிஸி தான். ஒருவர் வேலையை முடித்துவிட்டு கீழே வைத்தால் அடுத்தவர் அதை எடுக்கும் நிலையில் அதை யார் எடுப்பது என தகராறு வருகிறது. Xi அதை எடுத்து மண்ணில் தூரமாக புதைத்து விட்டு வர அதையும் ஒரு மிருகம் தோண்டி எடுத்து அவர்கள் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு போகிறது.

இந்த பிரச்சினைகளால் அதை கடவுளிடமே திருப்பி எறிய நினைத்த Xi வானத்தில் எறிய அது இரண்டு பேர் தலையில் விழுந்து அடிபட அது சாத்தானின் பொருள் அதை வானத்தின் அடிவாரத்தில் வைத்துவிட்டு வருவதாக சொல்லி போகிறான் Xi. வழியில் ஒரு பெண் உட்பட மூன்று வெள்ளையர்களும், அரசை எதிர்க்கும் ஒரு குழுவும் இவர்களுக்குள் ஏற்படும் மோதல்களே பாக்கிக்காமெடி.

படம் உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது. சிலக்காட்சிகளில் தனுஷை ஞாபகப்படுத்தும் Xi என்கிற பாத்திரத்தில் நடித்த ஆப்ரிக்க பழங்குடி இனத்தவரான N!xau (எப்படி உச்சரிப்பது?) உலகப்புகழ் பெற்றார். இந்தப்படத்தில் நடித்த போது 300 டாலர் இவருக்கு சம்பளமாக தரப்பட்டது. பேப்பர்களில் வரும் பணத்தை பற்றி இவர் அறிந்திருக்கவில்லை. அந்த 300 டாலரையும் எங்கோ களைந்து விட்டார். அவருக்கு நவீன வாழ்க்கை பற்றி தெரிந்திருக்கவில்லை. வெளௌளையர்களையே படத்தில் நடிக்க வந்ததும் தான் பார்க்கிறார். பணத்தை எப்படி உபயோகிக்கவேண்டும் என தெரிந்திராத அவர் தன் வீட்டுக்கு அதன் மூலம் மின்சாரத்தையும், தண்ணீர் வசதியையும் ஏற்படுத்திக்கொண்டார்.

இந்தப்பட வெற்றிக்குப்பிறகு நகரத்தில் குடியேறி உலகை வலம் வந்து மேலும் நான்கு படங்களில் நடித்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்று. சீனத்திரைத்துறை அவரை அழைத்து ஒரு பட வாய்ப்பை வழங்கியது. N!xau கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டார். பட வாயௌப்புகள் குறைந்ததும் நகர வாழ்க்கையின் அழுத்தம் தாங்காமல் அவர் நமீபியாவின் தன் இடத்துக்கே திரும்பினார். அங்கு நிலத்தை சீர் செய்து விவசாய நிலங்களாக மாற்றி அங்கேயே விவசாயத்தில் ஈடுபட்டார். அவர் வயது பற்றி தெரிந்திராத அவர் தனக்கு செங்கல் வைத்து நல்ல வீடு கட்டிக்கொண்டார். தனக்காக கார் வாங்கி வைத்தார். அதை ஓட்டுவதற்கு டிரைவரும் வைத்துக்கொண்டார். படத்தின் இயக்குனர் 2000 டாலர் வரை அவருக்கு மாதாமாதம் வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு நாள் தன் தோட்டத்தில் இறந்துகிடந்தார். வேட்டைக்காக போன அவருக்கு மூன்று மனைவியும் ஆறு குழந்தைகளும் இருந்தன.

இவரது கதை மிக ஆச்சர்யமானது தானே. இதையே நம்ம தமிழ், மலையாள டைரக்டர்கள் என்றால் செக்ஸ் படமாக மாற்றி இருப்பார்கள். ஆதிவாசி என்றாலே இவர்களுக்கு அருவியில் குளிப்பது தான்.

அசத்தலான காமெடிப்படம். ஆனால் குழந்தைகளோடு பார்ப்பது உங்கள் இஷ்டம். சில ஆதிவாசி ஹாப் நேக்கட் காட்சிகள் இருப்பதால்.

காமெடிக்காகவும், புதுமைக்காகவும் ரசிப்பீர்கள்….

-முகநூலில் செல்வன் அன்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.